ஐ ஏம் கம்மிங் :அப்டேட் குமாரு

Published On:

| By Kavi

இன்று இணையதளங்களில் வைரலான மீம்ஸ் மற்றும் ட்ரோல்களை பார்த்து ரிலாக்ஸ் ஆகலாம் வாங்க

ADVERTISEMENT

mohanram.ko

ஐ ஏம் கம்மிங்….
படம் வரப்போகுதா?
இல்லை, விசாரணைக்கு வரப் போறாரு

ADVERTISEMENT

balebalu

முன்பு சென்னையில் AC வாங்குற செலவு மட்டும் தான் இருந்தது
இப்ப இருக்குற கிளைமேட் க்கும் , குளிர் காற்றுக்கும்
ரூம் ஹீட்டர் வாங்குற செலவும் சேர்ந்துடும் போல

ADVERTISEMENT

ArulrajArun

300 சவரன் நகை, பல லட்சம் ரூபாய் மோசடி .. சிக்கிய 8 ஆண்டு தலைமறைவாக இருந்தவரின் தாய்… பொங்கல் தொகுப்பு வாங்க வந்தபோது சிக்கிய சம்பவம்
படிச்சு படிச்சு சொன்னேன் 300 சவரன் நகை இருக்கு பல லட்சம் ரூபாய் காசு இருக்கு 3000 காசு வாங்க போவாத ன்னு….

Mannar & company

அலாரமே வைக்காம அதிகாலைல எழுந்திரிக்கிறாங்கன்னா எல்லாப் பிரச்சனையும் மண்டையில் ஓடிக்கிட்டே இருக்குன்னு அர்த்தம்!

மயக்குநன்

தேர்தலில் எதிரி, துரோகி எல்லாம் என் கண்களுக்குத் தெரியாது!- டிடிவி தினகரன்.
அண்ணனுக்கு 20 ரூபாய் டோக்கன் மட்டும்தான் கண்ணுக்கு தெரியும் போல..?!

படிக்காதவன்

நாம இளைப்பாற நினைச்சாலும்
தேவைகள் நம்மளை
இழுத்து செல்லவே செய்கிறது…

amudu

வருடம் முழுவதும் வச்சு செஞ்சுட்டு, திருமண நாளன்று மட்டும் கணவருக்கு ராஜமரியாதை தரும் மனைவியைப் போல தான், அரசியல்வாதிகள் தேர்தல் சமயத்தில் மக்களுக்கு தரும் மரியாதையும்.

எனக்கொரு டவுட்டு!?

டாஸ்மாக் to ரேஷன் கடை
இந்தா பாரு, இன்னைக்கு வேணா உன் கடைல கூட்டம் இருக்கலாம் அதுக்காண்டி நீ எல்லாம் என்னய மாதிரி ஆகிட முடியாது

மயக்குநன்

முதல்வர் ஸ்டாலினின் ஆட்சி நன்றாகத்தான் இருக்கிறது!- ராமதாஸ்.
கோட் வேர்ட் அக்ஸப்டட் ஐயா..!

லாக் ஆஃப்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share