அமலாக்கத் துறைகிட்ட சொல்லி தேட சொல்வோமா?: அப்டேட் குமாரு

Published On:

| By Kavi

இன்னிக்கு மதியம் நண்பர் கூட சாப்பிட போயிருந்தேன்… அவர் தன்னோட மனைவிகிட்ட டென்ஷனா போன் பேசிட்டே வந்தாரு…

போன வச்சதும் என்ன நண்பா பிரச்சினைனு கேட்டேன்…

ADVERTISEMENT

அது ஒன்னும் இல்ல நண்பா, ரேஷன் கார்டுக்கு பொங்கல் பரிசு 3000னு அறிவிச்சாலும் அறிவிச்சாங்க… யாரு ரேஷன் கடைக்கு போறதுனுதான் ஒரே பிரச்சினை…

இத்தனை நாளா நான் தான் போய் பொருட்கள்லாம் வாங்கிட்டு இருந்தேன். இப்பவும் நான்தான போகனும்.. இந்த முறை மட்டும் அவ போறனு சொல்லி ரேஷன் கார்ட மறைச்சி வச்சிட்டா…

ADVERTISEMENT

நானும் ரெண்டு நாளா தேடுறேன் கிடைக்கலனு சொன்னாரு…

இதை கேட்ட இன்னோரு நண்பரு, வேணும்னா அமலாக்கத் துறைய விட்டு தேட சொல்லுவோமானு கேக்குறாரு

ADVERTISEMENT

நீங்க அப்டேட்ஸ் பாருங்க

balebalu

விசாரணைக்கு டெல்லி ஆபீசுக்கு வரச்சொல்லி இருக்காங்களே ன்னு உனக்கு கவலை
சிபிஐ ஆபீசர்களை பனையூர் வீட்டுக்கு வர சொல்லாம இருக்காரே ன்னு எனக்கு சந்தோசம்

ArulrajArun

“விடியற்காலம்” தினமும் தான் வரும் அதை நம்முடைய “விடிவுக்காலமா” மாத்துறது நம்ம கையில்தான் இருக்கு

ச ப் பா ணி

“என்ன” என்பது கேள்வி
“ன்னா” என்பது எச்சரிக்கை
-fb

mohanram.ko

காலேஜ்ல ரேஷன் கார்டு காட்டினாதான் உள்ளே விடுவாங்கன்னு பொய் சொல்லிட்டு எடுத்துட்டு போறான்டி உன் மகன்…

Sasikumar J

~ அவன எதுக்குடா அமெரிக்கா படைகள் தூக்கிட்டு போனாங்க….!
~ தலையில நிறைய ஆயில் தடவிட்டு வந்து இருக்கான்…!!

mohanram.ko

சினிமா பார்த்தால் தான் எல்லோருக்கும் லாபம்… டிரைலர் பார்த்தா யாருக்கும் லாபம் இல்லை…
ஏன்,ட்ரைலர் வியூஸ் குறைவா இருக்கா…
எதே,ஆமா

iQKUBAL 

வேலைக்கு போனா நம்ம கஷ்டம்லாம் தீர்ந்துடும்னு நெனச்சேன்..
அப்றம் தான் தெரிஞ்சது கெடச்ச வேலைய காப்பாத்துறதே கஷ்டம்னு..

மயக்குநன்

அமைதிப் பேச்சுவார்த்தைக்கு உக்ரைனும், ரஷ்யாவும் நெருங்கி வருகின்றன!- ட்ரம்ப்.
அப்ப… அமைதிக்கான நோபல் பரிசு உங்களை நெருங்கி வருதுனு சொல்லுங்க..!

balebalu

பொங்கல் பரிசு பணத்தை வாங்கக்கூடாது ன்னு
சோ மீ ல கம்பு சுத்தின ஆளுதான நீ
இப்ப எங்க முக்காடு போட்டுக்கிட்டு ரேஷன் கடைல நிக்குற

எதே ஆமா அதுக்கென்ன இப்போ

ச ப் பா ணி

தீ பரவட்டும்

யார்ணே நீ..?
நானும் உன்னை மாதிரி சமையல்காரன் தா.. அடுப்பு பத்த வைங்கப்பா

மயக்குநன்

ஜெயலலிதா ஆட்சி மீண்டும் வர வேண்டும்!- சசிகலா.
சின்னம்மா மறுபடியும் பெங்களூருல ஷாப்பிங் போக ஆசைப்படறாங்க போல..?!

கோழியின் கிறுக்கல்!!

மெத்த படித்தவரையும் கைநாட்டாக மாற்றி விட்டது,
கைப்பேசி!!

லாக் ஆஃப்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share