ஒவ்வொரு நியூ இயருக்கும் இதே தான் : அப்டேட் குமாரு

Published On:

| By Kavi

இன்னிக்கு ப்ரெண்ட்ஸ் எல்லோரும் ஜூஸ் ஷாப் போனோம்…

அப்போ நம்ம நண்பர் பேச ஆரம்பிச்சாரு…. நியூர் இயர் வருது என்ன பன்னலாம்னு கேட்டாரு

ADVERTISEMENT

இன்னொரு நண்பர், இந்த வருஷத்துல இருந்தாவது, காச சேத்து வைக்கணும், ஹெல்த்தியா சாப்டணும், நைட்ல மொபைல் நோண்டாம தூங்கணும், சரியான நேரத்துக்கு ஆபீஸ் போகணும், மேனேஜர்ட்ட திட்டு வாங்காத அளவுக்கு வேலை செய்யணும்னு ஒரு லிஸ்ட்டே போட்டாரு…

இத கேட்ட ஜூஸ் கட கார அண்ணன், எதாவது நடக்கற காரியமா பேசுங்க தம்பினு ஜூஸுக்கு காசு வாங்கிட்டு அனுப்பிட்டாரு

ADVERTISEMENT

நீங்க அப்டேட்ஸ் பாருங்க…

செங்காந்தள்

ADVERTISEMENT

முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்க முடியாது.
ஆனால் அல்வாவில் மறைக்க முடியும்…!!!

Mannar & company

இங்கே போட்டியே இரண்டு பேருக்கும்தான்.
ஒண்ணு ‘தீய சக்தி’..
இன்னொன்னு ‘பராசக்தி’!

balebalu

PAN – ஆதார் இணைக்க கடைசி எச்சரிக்கை கொடுத்த ஒன்றிய அரசு – செய்தி

இதே மாதிரி வாக்காளர் ஐடி யுடன்
ஆதாரை இணைக்க சொல்லி இருந்தால் இன்னேரம் #SIR க்கு வேலையே இருந்திருக்காதே

mohanram.ko

அழற குழந்தைக்கு தான் பால் கிடைக்கும்…..
டீக்கடைக்காரர்- காசு கொடுத்தா தான்டா பால் கிடைக்கும்…

ArulrajArun

நிலாவை காட்டி சோறு ஊட்டுவதின் Update Version தான் Mobile ஃபோனை காட்டி குழந்தைகளுக்கு சோறு ஊட்டுவது

கோழியின் கிறுக்கல்!!

பேசாம இரவு நேரத்தை விடியற்காலை 3 மணியில் இருந்து காலை பத்து மணி வரைனு மாத்திடுங்க,
ஏன்னா அப்ப தான் நல்லா தூக்கம் வருது!!

ச ப் பா ணி

இந்த வாரம் எப்பிடி போச்சினு யோசித்தால் வீக் என்ட்

இந்த வருஷம் எப்படி போச்சினு யோசித்தால் இயர் என்ட்

Mannar & company™

அடுப்பில் வைத்த பாலும், மனைவியும் ஒண்ணு தான்..
கண் சிமிட்டும் நேரத்திலும் கவனிக்கலைன்னாலும் பொங்கிடுறாங்க!

Sasikumar J

இங்க கோயில்ல வேண்டிகிட்டு செங்கல் வச்சா வீடு கட்டலாம்….!
அடேய் ஏற்கனவே வாங்குன வீட்டிற்கு இன்னும் EMI கட்டாம முடியாம இருக்குடா…!!

கோழியின் கிறுக்கல்!

பொது இடத்தில் மொபைலை பார்த்துக் கொண்டிருப்பது,
பல தர்மசங்கடங்களில் இருந்து நம்மை காப்பாற்றுகின்றது!!

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?

தவெக நிர்வாகிகளிடம் டெல்லி CBI அலுவலகத்தில் நடைபெற்ற விசாரணை நிறைவு.
அண்ணே.. தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை எல்லாம் நல்லபடியா முடிஞ்சுதா..?

லாக் ஆஃப்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share