இன்னிக்கு ஈவ்னிங் ஆபீஸ் முடிஞ்சதும், நண்பரும் நானும் வழக்கமா போற டீ கடைக்கு போனோம்…
டீ சாப்பிட்டு இருக்கும்போதே, ‘இடியாப்பம்… இடியாப்பம்’னு சத்தம் கேட்டுச்சு. உடனே நண்பர், மனைவி ஊருக்கு போய்ட்டா… 20 ரூபாய்க்கு இடியாப்பம் வாங்கிட்டு போனா நைட் டின்னர முடிச்சிடலாம்னு சொன்னாரு…
சரி… வாங்க போய் வாங்கலாம்னு டீ கடைல காசு கொடுத்துட்டு வர்றதுக்குள்ள, இடியாப்பம் விக்கிறவரு மின்னல் வேகத்துல பறந்துட்டாரு…
உடனே நம்ம நண்பர் அதிருப்தியில,
ரேஸ் போற அஜித் குமாரு கூட, இப்படி மின்னல் வேகத்துல பறக்கமாட்டாரு போல, இடியாப்பம் விற்க உரிமம் தேவைனு உத்தரவு போட்ட மாதிரி, பொறுமையாதான் வண்டிய ஓட்டனும்னு சட்டம் போடனும்னு சொல்றாரு…
சரி விடுங்க நண்பானு, ரெண்டு பேரும் பேசிகிட்டே ஒரு ஹோட்டல் போய் சாப்ட்டு கிளம்பிட்டோம்.
நீங்க அப்டேட்ஸ் பாருங்க

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
சைக்கிள் மற்றும் பைக்கில் இடியாப்பம் விற்போர் இனி உரிமம் பெற வேண்டும் – உணவு பாதுகாப்பு துறை
அப்படியே 2 கிமீ க்கு மேல ஸ்பீடு போக முடியாதபடி வண்டில வேகத்தடை கருவி பொறுத்தனும்னு உத்தரவு போடுங்கய்யா.. இடியாப்பமே வாங்க முடியல..

ச ப் பா ணி
அப்பறம்.. அடுத்த வருஷம் பார்க்கலாண்டா
Me: இன்னுமாடா இதெல்லாம் ஜோக்குனு சொல்லிக்கிட்டு இருக்கீங்க

iQKUBAL
கிறிஸ்மஸ் லீவுல என்ன பண்ணுவீங்க?
நியூ இயர் லீவுக்கு வெயிட் பண்ணுவேன்..
அப்ப, நியூ இயர் லீவுல..
பொங்கல் லீவுக்கு வெயிட் பண்ணுவேன்..

ச ப் பா ணி
ஆம்புலன்ஸூக்கு வழிவிடுவது ஆறாம் அறிவென்றால்..அதன் பின்னாலேயே செல்வதுதான் ஏழாம் அறிவு

கோழியின் கிறுக்கல்!!
சிலர் நடிப்பது அப்பட்டம்மாக தெரிந்தும்,
அதை நம்புவது போல் நடிப்பது தான் பக்குவம்!!

Sasikumar J
இவனுக்கு நான் பார்த்து இன்கிரிமென்ட் போட்டேன் சாமி…!
இவன் என்னன்னா என்னோட காஸ்ட்லியா ஐ போன் 17 ப்ரோ மொபைல் வாங்கி இருக்கான்…!!

balebalu
இடியாப்பம் விற்பனை செய்ய உரிமை கட்டாயம் – செய்தி
அது இருக்கட்டும்
யார் கூப்பிடுறாங்க , என்ன ஏது ன்னு கூட பார்க்காமல்
சைக்கிளில் வேகமாக பறக்க கூடாது ன்னும்
ஒரு சட்டம் கொண்டு வாங்க

mohanram.ko
வேலை பளு காரணமாக, இருந்தும் எடுக்க இயலாமல் வருடக் கடைசியில் வீணாகிப் போகின்றன, விடுப்புகள்…

iQKUBAL
காலைலயே இவ்வளோ வடை, அப்பம் சுட்டு வச்சிருக்கீங்களே.. யார் சாப்டுவா?
கடைக்காரர் :~ இந்தா வாக்கிங் வந்திருக்கானுகளே தடிமாடுக.. இவனுக திண்ணுவானுக

SANKARRAMANI
“கங்கையைப் போல சுத்தமானவர் மோடி.” – ரவிசங்கர் பிரசாத்
“ஹா ஹா ஹா, யோவ், செம உள்குத்து நைனா.”

லாக் ஆஃப்
.
