கேட்க வேண்டியவங்களுக்கு கேட்குமா?: அப்டேட் குமாரு

Published On:

| By Kavi

இன்னிக்கு வழக்கம் போல நண்பர் கூட டீ கடைக்கு போயிருந்தேன்… அப்ப  நம்ம வட மாநில தம்பி, பயா டீ வேணுமா, காபி வேணுமானு கேட்டான்.. 

இதை கேட்ட நம்ம நண்பர், தமிழ்நாட்டுக்கு வந்து நல்லா தமிழ் கத்துகிட்டடானு சொன்னாரு…  அவனும் சிரிச்சிகிட்டே போய்ட்டான். 

ADVERTISEMENT

பிறகு நாங்க ரெண்டு பேரும் பேசிட்டு இருந்தோம்…

இந்தியாவுக்கு வந்த ரஷ்ய அதிபர் கூட இந்தியாவுல அனைவரும் இந்தி பேசுறதில்ல. பல்வேறு மொழிகள் பேசுறாங்க.. இந்த ஒற்றுமையும் பன்முகத் தன்மையும்தான் வேணும்னு சொல்லியிருக்காருனு சொன்னேன்.

ADVERTISEMENT

இத கேட்ட நண்பர்…. இதைத்தானே தமிழ்நாட்டுல இருந்து பல வருஷமா சொல்லிகிட்டு இருக்கோம்… கேட்க வேண்டியங்களுக்கு கேட்டா சரினு சொல்றாரு… 

நாங்க டீய குடிச்சிட்டு கிளம்பிட்டோம்.

ADVERTISEMENT

நீங்க அப்டேட்ஸ் பாருங்க

balebalu

இந்தியாவில் அனைவரும் ஹிந்தி பேசுவதில்லை – புதின்

அமித் ஷா நவ் :

ரெட் கார்பெட் விரிச்சு கூப்பிட்டு
விருந்து வெச்சதுக்கு
உன்னால என்ன சொல்ல முடியுமோ
அத சொல்லிட்ட

டிங் டாங்

நமக்கு ஒரு நாள் தான் லீவு
சண்டேக்கு மட்டும் ஆறு நாள் லீவு…

பரமசிவம் ராமசாமி

பாண்டிச்சேரினு சொன்னதும்
சரக்கு ஞாபகம் வந்தா
மனுசன்…

மணக்குள விநாயகர் ஞாபகம்
வந்தா…
-பெரிய மனுசன்…

படிக்காதவன்

பிடிக்கலைனாலும்
சளி பிடிச்சிருக்கு’னுதான்
சொல்ல வேண்டியதா இருக்கு…

Sasikumar J

பணம் சம்பாதிக்க பணிக்கு போகணும்…!
அதான் இல்ல முதல்ல பனியில எழுந்திரிகணும்…!!

ArulrajArun

இந்தியாவில் அனைவரும் ஹிந்தி பேசுவதில்லை – புதின்
தமிழ்நாடு மக்கள்; ஏலே இத தாம்லே நாங்க ஆரம்பத்திலிருந்து கத்திட்டு கிடக்கோம் எலே இதுக்காக தான் புதின் கூட்டிட்டு வந்தீர் …

மயக்குநன்

இந்தியாவுக்கும், ரஷ்யாவுக்கும் இடையிலான உறவு வலுவானது!- சசிதரூர்.
உங்களுக்கும், பாஜகவுக்கும் இடையிலான உறவு மாதிரிங்களா..?!

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?

விஜய் தமிழ்நாட்டுக்கு மட்டும் தான் குரல்கொடுப்பான் என நினைத்து விடாதீர்கள் – விஜய்
டேய்.. நீ தமிழ்நாட்டுக்கு குரல் குடுப்பேன்னே நாங்க நினைக்கலயேடா..

Writer SJB✒️

மலர்களை கேட்டாய் தோட்டமே தந்தேன்
தண்ணீர் கேட்டாய் மழையே தந்தேன்,,

ஆக மொத்தம் நான் எது கேட்கிறேனோ அத தர மாட்டே…?

ச ப் பா ணி

தெரிஞ்சா OK கொடுக்கனும்
தெரியலனா Cancel கொடுக்கனும்
-கணினியில்

mohanram.ko

விஜய் தமிழ்நாட்டுக்கு மட்டும் தான் குரல்கொடுப்பான் என நினைத்து விடாதீர்கள் – விஜய்
எல்லா மொழி படத்துக்கும் டப்பிங் கொடுப்பார் போல இருக்கு….

லாக் ஆஃப்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share