திருக்குறள் பாடினால் தமிழ்நாட்ல தேர்தல்னு தெரிஞ்சுக்கோ: அப்டேட் குமாரு

Published On:

| By Kavi

இன்று இணையதளங்களில் வைரலான மீம்ஸ் மற்றும் ட்ரோல்களை பார்த்து ரிலாக்ஸ் ஆகலாம் வாங்க

iQKUBAL 

ADVERTISEMENT

My Legs to my Mouth :~

இவர் இஷ்டத்துக்கு கண்டத திண்ணு தொப்பைய ஏத்துவாராம்..
நான் காலங்காத்தால எந்திரிச்சு நாய் மாதிரி ஓடனுமாம்..

ADVERTISEMENT

ArulrajArun

நாம பல பேருக்கு நல்ல விஷயங்களை projector போட்டு காட்டி சொல்லலாம்னு நினைக்கும்போது தான் நம்மள ஒரு சில பேர் screen போட்டு மறைச்சிகிட்டு இருப்பாங்க தம்பி …

ADVERTISEMENT

balebalu

வந்தே மாதரம் புகழாரம் சூட்டினால்
வெஸ்ட் பெங்கால்
தேர்தல் வருது தெரிஞ்சுக்கோ

திருக்குறள் புகழ் பாடினால்
தமிழ்நாடு தேர்தல் வருது தெரிஞ்சுக்கோ

ச ப் பா ணி

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண அவரைக் குத்திக்காட்டி
ஸ்டேட்டஸ் வைத்து விடல்

செங்காந்தள்

நம்மை வழிநடத்த நல்ல தலைவர்கள் இல்லாததால்,
அந்த இடத்தை நடிகர்,நடிகைகள் பிடித்துக் கொண்டார்கள்…!!!

Mannar & company

ஒவ்வொரு நாளும் தினசரி காலண்டரின் முகமூடியை நாம கிழித்தெறிந்தாலும் அந்த நாள் அதன் வேலையை காட்டிவிடுகிறது!
-காலண்டர்த்துவம்

ச ப் பா ணி

ஓர் எல்லைக்கு மேல் கேள்வி கேட்டால் அறிவியல்
கேள்வி கேட்காமல் நம்ப வேண்டியிருந்தால் ஆன்மிகம்

மயக்குநன்

அதிமுகவை பலவீனப்படுத்தி, தமிழகத்தில் 2-வது பெரிய சக்தியாக வரவேண்டும் என்பது பாஜகவின் ஆசை!- துரை வைகோ.

திமுகவை பலவீனப்படுத்தி, தமிழகத்தில் 2-வது பெரிய சக்தியா வரணும்னு ஒருகாலத்தில் மதிமுக ஆசைப்பட்ட மாதிரிங்களா..?!

கோழியின் கிறுக்கல்!!

விளக்கி சொல்வதற்கு,
விலகி செல்வதே நல்லது!!

Mannar & company

கழுத்துல ‘டை’ கட்டிகிட்டு ஸ்கூல் போக ஆரம்பிச்சு,
தலையில் ‘டை’ அடிச்சிகிட்டு வேலைக்கு போவதில் முடிகிறது வாழ்க்கை!

லாக் ஆஃப்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share