யாருக்கும் பாரபட்சம் இல்லை :அப்டேட் குமாரு

Published On:

| By Kavi

இன்று இணையதளங்களில் வைரலான மீம்ஸ் மற்றும் ட்ரோல்களை பார்த்து ரிலாக்ஸ் ஆகலாம் வாங்க

balebalu

ADVERTISEMENT

மத்திய அரசு நவ் :

கொரோன நேரத்துல திடீர் லாக்டவுன் போட்டு ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் ரயில்வே டிராக்குல நடந்து போனாங்களே

அப்ப என்ன செஞ்சோம்
ஒன்னும் செய்யல்ல

ADVERTISEMENT

அதேதான் இப்ப இண்டிகோ பயணிகளுக்கும்
பாரபட்சமில்லாமல் இருக்கோம்.

Mannar & company

ADVERTISEMENT

கடவுளும்,
கொசுவும் ஒண்ணு.

கடவுளுக்கு ஊதுபத்தி,
கொசுவுக்கு கொசுவர்த்தி,

ஆனா,
கொசு வந்து கஷ்டபடுத்துது,
கடவுள் வராம கஷ்டபடுத்துறார்!

ச ப் பா ணி

காலம் எவ்ளோ வேகமா போகுது பாத்திங்களா

இப்போ தான் புது காலண்டர் மாட்டுனமாதிரி..இருக்கு
அதுக்குள்ள இப்ப புது காலண்டர் வந்திருச்சு

balebalu

புது கட்சில என்ன improvement ?
பொதுவா virtual ல்லா கடிப்பாங்க இப்ப
Real ல்லா கடிக்குறாங்க

ச ப் பா ணி

விடுப்பா விடுப்பா
சன் டே ராத்திரி லேட்டா வந்தா
வாயை ஊதுனு சொல்றதும்

மண்டே மார்னிங் அதிகம் பேசினால் வாயை மூடுனு சொல்றதும் மனைவியின் இயல்புதானே

mohanram.ko

ஒல்லியா இருக்கேன்னு சொன்னா வருத்தப்படுறீங்க …
ஸ்லிம்மா இருக்கேன்னு சொன்னா சந்தோஷப்படுறீங்க… யாருமா நீங்கெல்லாம்…

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?

புதுசு புதுசா ரிலீஸ் ஆகற ஒவ்வொரு மொபைலும் ஸ்லிம் ஆயிட்டே போகுது. எல்லா மாடல் போனையும் வாங்கி, பார்த்த ரீலையே திரும்ப திரும்ப பாக்கற மனுசன் உடம்பு மட்டும், பெருத்துட்டே போகுது..

மயக்குநன்

உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர புதினுக்கு விருப்பம்!- ட்ரம்ப்.
அதைச் சொல்லி நோபல் பரிசு வாங்க உங்களுக்கு விருப்பம்… அப்படித்தானே..?!

✒️Writer SJB✒️

நீங்க கஷ்டப்படும்போது கல்யாணத்துக்கே கூப்பிடாத சொந்தக்காரன் நீங்க வசதியா வாழும் போது காதுகுத்துக்கு கூட வந்து கூப்பிடுவான்,

இங்கே பணம் தான் உறவுகளை இணைக்கிறது அதே பணம் தான் உறவுகளை பிரிக்கிறது..!

லாக் ஆஃப்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share