டிஆர்பி ஏத்துனதுக்கு நன்றி :அப்டேட் குமாரு

Published On:

| By Kavi

கார்த்திகை தீபம் முதல் மழை வரை… இன்று இணையதளங்களில் வைரலான மீம்ஸ் கண்டெட்டுகளை பார்த்து ரிலாக்ஸ் ஆகலாம் வாங்க…

balebalu

ADVERTISEMENT

ஏங்க ரோட் ஷோவே தான் வேணுமா இந்த பொதுக்கூட்டம் , பேரணி எல்லாம் எதுவும் வேண்டாமா ட்ரான்ஸ்பார்மர் மேல ஏர்றவங்களுக்கெல்லாம் அனுமதி கொடுக்குறதில்ல

ச ப் பா ணி

ADVERTISEMENT

ஆயுசு நூறு என்பதன் நவீன வெர்சன் தான்..
இப்பதான் உனக்கு கால் பண்ணனும்னு நினைச்சேன் என்பது

Joe..

ADVERTISEMENT

இங்க பாருடி அண்ணனை, திருப்பரங்குன்றம் பிரச்சினையை சரி பண்ண கிளம்பிட்டாரு..
நானே பாண்டிச்சேரி ரோட் ஷோக்கு பெர்மிஷன் வாங்க போயிட்டு இருக்கேன், இவளுக வேற..!!

இந்த பொதுக்கூட்டம் , பேரணி எல்லாம் எதுவும் வேண்டாமா
ட்ரான்ஸ்பார்மர் மேல ஏர்றவங்களுக்கெல்லாம் அனுமதி கொடுக்குறதில்ல

ArulrajArun

மனுசனுக்கு தன்மான பிரச்சினை வந்தா “கோபத்தின் உச்சத்திலும்”
செரிமான பிரச்சினை வந்தா “சோகத்தின் உச்சத்திலும்” இருக்கிறான்

iQKUBAL 

ஏத்திட்டானுக மாமா.. 
என்ன மாப்ள? தீபமா?
தீபமா? ஹவுஸ் ஓனர் வீட்டு வாடகையை ஏத்திட்டான் மாமா..

Angelina AK

வர வர ஒண்ணுமே புரிய மாட்டேங்குது மாமா…
வாழ்க்கையா மாப்ள…
இல்ல வானிலை மாமா

ச ப் பா ணி

காலில் என்ன காயம்?
செருப்பு கடித்துவிட்டது
பின்ன அத மிதிச்சா சும்மா விடுமா?

Boye_ Geche

அடுத்து மழை எப்போ வரும் தோழிம்மா…
எதுக்கு என்கிட்ட வந்து கேட்குறிங்க …
மயிலுக்கு முன்னாடியே தெரிஞ்சிடும்னு சொன்னாங்க அதான்

லாக் ஆஃப்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share