இன்று இணையதளங்களில் வைரலான மீம்ஸ் மற்றும் ட்வீட்களை அப்டேட் குமாரில் பார்த்து ரிலாக்ஸ் ஆகலாம் வாங்க…

balebalu
சென்னை மக்கள் டு டிட்வா புயல் :
நாடு விட்டு நாடு வந்தாலும்
வலு குறைந்தாலும்
குளிர் காற்றும் சாரல் மழையும்
இன்னும் உன்னை விட்டு போகல
-Ditwah

ச ப் பா ணி
வெயில் வந்திடுச்சு
துணி காய்ஞ்சிடும்
God is double great

தர்மஅடி தர்மலிங்கம்
செங்கோட்டையனின் அனுபவம் தவெகவுக்கு உறுதுணயாக இருக்கும்; விஜய்!
சொந்த கட்சியில உள்ளவங்களுக்கு உறுத்தாமா இருந்தா சரி தான்…

மயக்குநன்
வரும் தேர்தலில் எங்களுக்கு யாரும் போட்டி இல்லை!- சீமான்.
ஏன்… செவ்வாய் கிரகத்தில் போட்டியிடப் போறீங்களா பாஸ்..?!

Mannar & company
சின்னக் குழந்தையாக இருந்தபோது மிட்டாய் வாங்க சில்லறை இருக்காது,
இப்பல்லாம் மிட்டாய்கள் இருக்கிறது சில்லறைதான் இல்லை!

தர்மஅடி தர்மலிங்கம்
“வந்தவர் எல்லாம் வாகை சூட நினைத்தால் எங்கள் போர்க்குணம் விடாது”
மநீம தலைவர் கமல்ஹாசன்
அப்போ… எம்பி சீட் கொடுத்தால்..???

Sasikumar J
~ இவ்வளவு மழையிலயும் ஆபீஸ் வந்து இருக்க, ஆபீஸ் வேலை மேல அவ்வளவு அக்கறையா…!
~ அதெல்லாம் இல்ல காலையில லன்ச் செஞ்சாச்சு அதுக்காக தான்…!!

மயக்குநன்
தமிழக கட்சிகளை பாஜக இயக்குவதாக கூறுவது தவறு!- கார்த்தி சிதம்பரம் எம்.பி.
எங்களுக்கு என்னவோ உங்களையும், சசிதரூரையும்தான் இயக்குற மாதிரி தெரியுது..!

லாக் ஆஃப்
