சென்னையில மழை வெளுத்து வாங்கிட்டு இருக்கு… நேத்திக்கு டிட்வா புயல் வலுவிழந்துடுச்சு அப்படின்னு வானிலை ஆய்வு மையம் சொன்னாலும்… புயலே இப்பதான் ஆரம்பம்ங்கற மாதிரி மழை கொட்டிட்டு இருக்கு…
அதனால வழக்கமா நண்பர்கள் கூட டீக்கடைக்கு போக முடியல…
எப்படா மழை விடும்னு பார்த்துட்டு இருந்த போது தான் நண்பர் ஃபோன் பண்ணாரு…
என்ன நண்பா மழை விடவே மாட்டேங்குதுனு கேட்டதுக்கு…
ஆமா நண்பா டிட்வா டிசம்பர்காக காத்திருந்திருக்கும் போல… 1ஆம் தேதியே இப்படி…. இன்னும் மாசம் ஃபுல்லா என்ன செய்ய காத்திருக்கோ தெரியலன்னு புலம்புறாரு…
சரி நீங்க அப்டேட்ஸ் பாருங்க….

balebalu
டிட்வா புயல் நவ் : மெட்ராசை சுத்தி பாக்க போறேன்
மெரினாவில் வீடு கட்ட போறேன்
மழை மேகம் சேர்த்து வைக்க போறேன்
இங்கேயே தங்கி இருக்க போறேன்

Mannar & company
டிசம்பர் மாதம் வந்துட்டா போதுமே ஜிம்முக்கு விளம்பரம் பண்ண ஆரம்பிச்சிடுவீங்களே…!

மயக்குநன்
தமாகாவுடன் காமராஜர் மக்கள் இயக்கம் இணைகிறது- ஈரோட்டில் டிச.20-ல் இணைப்பு விழா!- ஜி.கே.வாசன் தகவல்.
டிட்வா புயலை விட பெரிய புயல் தமிழக அரசியலில் வீசப்போகுது போலிருக்கே..?!

amudu
தனது காமராஜர் மக்கள் கட்சியை தமிழ் மாநில காங்கிரஸ் உடன் இணைத்தார் தமிழருவி மணியன்.
தனிமரம் தோப்பு ஆச்சுன்னு சொல்லுங்க.

கடைநிலை ஊழியன்
புயல் to me – ரொம்ப வெயில்ல இருக்கு னு ஃபீல் பண்ணுவாராம்.. சரி பாவம் னு நம்ம வந்தா, ஒரே மழையா இருக்கு னு நம்மளையும் திட்டுவாராம்..

ச ப் பா ணி
இந்த வருசமும் நாம கழட்டுனது காலண்டரை மட்டுந்தான் – 2025

டிங் டாங்
மாசக் கடைசியில் கடன் வாங்க அலைவதும்
வருசக் கடைசியில் காலண்டர் வாங்க அலைவதும்
மிடில் கிளாஸ் வாழ்வியல் எதார்த்தங்களில் ஒன்று

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
‘ராஜ் பவன்’ இனி ‘லோக் பவன்’ என்றழைக்கப்படும்! -ஒன்றிய அரசு
இதனால ஆர்ய பவன் ஹோட்டலுக்கு ஒன்னும் பிரச்சனை இல்லையே..?

balebalu
ராஜ் பவன் இனி ‘லோக் பவன்’ என்று பெயர் மாற்றம் – செய்தி
அப்பாடா இனிமே மழை, வெள்ளம், புயல் வந்தா மக்கள் அங்கு போய் தங்கி கொள்ளலாம்
இனி அது நம்ம சொத்து

ச ப் பா ணி
பொறுமையை போதித்தவர்களை விட,
பொறுமையை சோதித்தவர்களே அதிகம்

மயக்குநன்
இருட்டைக் கண்டு பயப்பட வேண்டாம்; நாளை சூரியன் வரும்!- கமல்ஹாசன்.
டார்ச்லைட்டை தொலைச்சிட்டு… என்னென்ன வியாக்கியானம் எல்லாம் பேசுறாரு பாருங்க..?!
லாக் ஆஃப்
