டித்வா புயல் சென்னையை நெருங்கிட்டு இருக்கு… இதனால வழக்கம் போல மல்லிகை கடையிலயும், சூப்பர் மார்க்கெட்டுலையும் பஜ்ஜி போண்டா மாவு, பால் பாக்கெட்டு வாங்குறதுனு மக்கள் போய்கிட்டே இருக்காங்க…
சரி நானும் ஒரு பால் பாக்கெட் வாங்கலாம்னு கடைக்கு கிளம்புனேன். அப்ப பக்கத்து வீட்டு அண்ணனும் நானும் வரேண்டானு கம்பெனி கொடுத்து பேசிட்டே வந்தாரு…
அப்போ, புயல் இப்ப எங்க இருக்காம்னு கேட்டார்.
சென்னைல இருந்து 350 கிமீ தூரத்துல இருக்குனு வானிலை மையம் சொல்லிருக்குனு சொன்னேன்.
இதுக்கு அவரு சென்னைல இருந்து சேலத்துக்கு எவ்ளோ தூரம் இருக்கும்னு கேட்டாரு…
என்ன 345 கிமீ இருக்கும்னு சொன்னேன்… அப்ப புயல் சேலத்துல தான் இருக்கு… பக்கமா வந்ததும் நான் போய் எனக்கு தேவையானத வாங்கிக்கிறேனு திரும்பி போய்ட்டாரு.
நீங்க அப்டேட்ஸ் பாருங்க…

Sasikumar J
~ எப்போதும் பாக்கெட்டில் பணம் இருக்க பச்சைக் கற்பூரம் வாங்கி வைக்கவும்…!
~ பச்சைக் கற்பூரம் வாங்கவே காசு இல்லையேடா…!!

ArulrajArun
சென்டரிங் வேலை பார்ப்பவர்கள் அதிகம் சொல்லுவது “கம்பி கட்டுற கதை’யா தான் இருக்கும்
ச ப் பா ணி
Cable connection கட் பன்னினால் தான் உருப்படுவ
-90 kids parents
Net connection கட் பன்னினால் தான் உருப்படுவ
-2k kids parents

Sasikumar J
நீங்கதான் என் உலகம்…! ~ அந்த உலகத்தையே ஆட்டிப்படைக்கிறியே…!!

திருப்பூர் சாரதி
மக்கள் புதியவர்களை எதிர்பார்க்கிறார்கள்!
– பெரியவர் செங்கோட்டையன்

mohanram.ko
காற்றே என் வாசல் வந்தாய், மெதுவாக கதவை திறந்தாய், காற்றே உன் பெயரை கேட்டேன்…
‘டித்வா’ என்றாய்

Mannar & company
எவ்வளவுதான் குளிருனாலும் உடம்பில் மேல சட்டை கூட போடாமல் இருக்கான் பாரு..
அவன்தான்டா இளந்தாரிப்பய!
கடைநிலை ஊழியன்
மழை + இளையராஜா + காபி னு சொன்னது எவன் டா..
குளிர் தாங்க முடியல டா..

ச ப் பா ணி
நொடிக்கு நொடி முன்னேறுவது
“கடிகாரம்” மட்டுமே!
Mannar & company
அம்மா வீட்டுக்கு போன மனைவி வருவதும், புயல் வருவதும் ஒண்ணு..
வந்து எந்த மாதிரியான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பது தெரியாது!

mohanram.ko
இந்த டித்வா புயலே விஜய் கட்சிதான்டா….அவரைதான்டா ஃபாலோ பண்ணுது… எப்படிடா அதுவும் சனிக்கிழமை தான்டா வருது
லாக் ஆஃப்
