இன்னைக்கு ஆபீஸ்ல இருந்து வீட்டுக்கு போயிட்டு, கடைக்கு போலாம்னு கிளம்பி வந்தேன்…
பக்கத்து வீட்டு குட்டி பையன் நின்னு வேடிக்கை பார்த்துகிட்டு இருந்தான்..
மழை கொட்டு கொட்டுன்னு கொட்டுது… மழை நின்னா தான் கடைக்கு போக முடியும்… எப்பதான் நிக்குமோ தெரியலையேன்னு புலம்பிக்கிட்டே இருந்தேன்
இதைக் கேட்ட அந்த பையன், உங்களுக்கு இப்ப மழை விடனுமானு கேட்டான் …
ஆமாண்டா… என்ன பண்ணப் போறேன்னு கேட்டேன்.
அப்படின்னா ஸ்கூலுக்கு லீவு விட சொல்லுங்க மழை நின்றும்னு சொல்றான்…
90ஸ் கிட்ஸ்ல இருந்து 2கே கிட்ஸ் வரைக்கும் இந்த வழக்கம் தொடருது போல.
நீங்க அப்டேட்ஸ் பாருங்க….

ச ப் பா ணி
Chubby is a word
ஓவர் குண்டு is an emotion

தர்மஅடி தர்மலிங்கம்
பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என திமுகவிற்கு கோரிக்கை வைப்போம்
-விசிக பொதுச் செயலாளர் ரவிக்குமார்
ஆமாமா…. இல்லாட்டி அவங்க தலைமையிலே மது ஒழிப்பு மாநாடு நடத்துவீங்களே.

iQKUBAL
Me to my kids :~
அதென்ன உங்களுக்கு மட்டும், மழை காரணமாக பள்ளிகள் விடுமுறை..
எனக்கு மட்டும், Monday morning meeting.

mohanram.ko
மேனேஜர் -வேலை சொல்லும்போது, பின்னாடி போய் திட்ட வேண்டியது, இப்ப ரிசைன் பண்ணீட்டு போகும் போது,’ மிஸ் யூ சார், நீங்க இல்லாம எப்படி சார் நாங்க வேலை பார்ப்பது’னு சொல்றீங்க….யார்ரா நீங்கெல்லாம்…

கோவிந்தராஜ்
இந்த வாழ்க்கை வாழ்றதுக்கா
எங்கம்மா கோயில் கோயிலா போய் வேண்டுதல் வச்சு என்னய பெத்தாங்க

மயக்குநன்
எதிர்க்கட்சியினர் ஆட்சியைப் பிடிப்பார்கள் என்று ஒரு பஞ்சாங்கத்தில் இருக்கிறது!- நயினார் நாகேந்திரன்.
2026 பஞ்சாங்கமா… 2029 பஞ்சாங்கமா..?!

Mannar & company
திங்கட்கிழமை காலையில் குடிக்கிற டீயை டீன்னு சொல்ல முடியாது…
அது ஒரு survival drinks!

ச ப் பா ணி
கேபிள் ஒயர், டி.வி ப்ளக் ஒயர் கழட்டி விட்டாச்சு..
-புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

தர்மஅடி தர்மலிங்கம்
முதல்வராக பழனிசாமி பதவியேற்பார் – ராஜேந்திர பாலாஜி
இவங்க பண்றதையெல்லாம் பார்த்தா எதிர்க்கட்சி தலைவரா கூட பதவியேற்க முடியாது போலயே…

மயக்குநன்
இபிஎஸ்ஸை எதிர்ப்பதாகச் சொல்லி அதிமுகவை ‘காவு’ கொடுக்கிறார்கள்!- தமிழிசை.
ஓகோ… அதான் அவர் அதிமுகவை ‘காவி’கிட்ட கொடுத்துட்டாரோ..?

லாக் ஆஃப்
