அரசியல்ல இதெல்லாம் சாதாரணப்பா: அப்டேட் குமாரு

Published On:

| By Kavi

இன்னிக்கு வழக்கம்போல ஆபீஸ் முடிச்சிட்டு பஸ்ல வீட்டுக்கு போய்ட்டு இருந்தேன்.

எனக்கு முன்னாடி உட்கார்ந்திருந்த ரெண்டு பேர் வானதி சீனிவாசன் பேட்டி பத்தி பேசிட்டு வந்தாங்க…

ADVERTISEMENT

ஆதான் எடப்பாடி பழனிசாமி முதல்வரா வந்தா கோவைக்கும் மதுரைக்கும் மெட்ரோ திட்டம் வரும்னு சொல்லிருக்காங்கல அதை பத்திதான்…

அதுல ஒருத்தரு கேக்கிறாரு, எடப்பாடி முதல்வர் ஆனா மட்டும் மக்கள் தொகை கம்மியா இருக்கறது இவங்க கண்ணுக்கு தெரியாதானு… எப்படியெல்லாம் அரசியல் பண்றாங்க பாருன்னு…

ADVERTISEMENT

இதை கேட்ட நான், அரசியல்ல இதெல்லாம் சாதாரணப்பானு நினைச்சிட்டு… ஸ்டாப் வந்ததும் இறங்கிட்டேன்…

நீங்க அப்டேட்ஸ் பாருங்க…

ADVERTISEMENT

ச ப் பா ணி

கணக்கு பார்க்காம செலவு செய்தா ஒன்னாம் தேதி
செலவு செய்ததை கணக்கு பார்த்தா இருபத்தி ஒன்னாம் தேதி

சரண்யா

ஆபீஸ் மீட்டிங் :
ஒன்னும் தெரியாத மாதிரி கம்முன்னு இருப்போம்…
My mind : ஏய், நிஜமாவே உனக்கு ஒன்னும்
தெரியாது டி.

ச ப் பா ணி

விஷேச வீட்டில்
தம்பி : ” கண்டிப்பா இருந்து சாப்பிட்டு தான் போகனும்..!!”
டேய் நான் வந்ததே அதுக்குதாண்டா

ArulrajArun

நமக்கு நடக்கிற எல்லா பிரச்சினைக்கும் காரணமே நமக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குதுங்கிற நினைப்பு மட்டும் தான்

ArulrajArun

“செல்லும் வழி எங்கெங்கும் பள்ளம் வரலாம்” ~ பள்ளம் வந்தா பரவாயில்லையே போற இடமெல்லாம் பாதாள சாக்கடையால்ல இருக்கு

Writer SJB

கோவை மதுரைக்கு மெட்ரோ ரயில் இல்லன்னு மோடி சொல்லிட்டாரு

SIR திட்டத்துக்கு மாநில அரசை எதிர்த்து போராட்டம் பண்ண மாதிரி மெட்ரோ ரயில் வராதத்துக்கும் மாநில அரசுதான் காரணம்னு ஒரு போராட்டம் நடத்தலாமா பாஸ்???

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?

ஒரு App பாஸ்வேர்டு மறந்துட்டேன்னு Reset password கேட்டதுக்கு லிங்க்கை ஈமெயிலுக்கு அனுப்பிருக்கு. அது நான் எப்பவோ யூஸ் பண்ண ஈமெயில்..

இப்ப அந்த ஈமெயில் பாஸ்வேர்டுக்கு நான் எங்க போவேன்..?

கோழியின் கிறுக்கல்

ஆண்கள் முட்டிப் போட்டு Fleets எடுக்காம,
எப்ப Sareeக்கு fleets எடுக்க, ஒரு machine வருதோ அப்ப தான் இந்தியா வல்லரசாகும்!!

லாக் ஆஃப்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share