திட்டம் எப்படி போடணும் தெரியுமா?: அப்டேட் குமாரு

Published On:

| By Kavi

இன்னிக்கு நானும் என் ப்ரண்டும் வழக்கம் போல சாயங்கலாம் டீ கடைக்கு போனோம். ரெண்டு காபி சொல்லிட்டு,  பேப்பர் பாத்துட்டு இருந்தோம். 

அதுல கோவை, மதுரை மெட்ரோ திட்டம் நிராகரிப்பு பத்தி விரிவா போட்ருந்தாக… 

ADVERTISEMENT

அதை படிச்ச என் ப்ரண்டு, எல்லாம் வருங்காலத்தை வைத்துதான் திட்டம் போடுவாங்க… ஆனால் இவங்கதான் இறந்த காலத்தை வச்சு திட்டத்தை போட்டு நமக்கான மெட்ரோ திட்டத்தை நிராகரிச்சிருக்காங்கனு சொன்னாரு…. 

அட புரியும்படி சொல்லுங்க நண்பானு கேட்டது…. இல்லை 2011 மக்கள் தொகைய வச்சு தான் நிராகரிச்சிருக்காங்க… இது எப்படி சரியா வரும்னு கேட்டாரு…. 

ADVERTISEMENT

அதுவும் சரிதானு சொல்லி…. காபிய குடிச்சிட்டு கிளம்பிட்டோம். 

நீங்க அப்டேட்ஸ் பாருங்க

ADVERTISEMENT

ArulrajArun

நாம ஒருத்தர் வீட்டுக்கு அடிக்கடி போயிட்டு வந்துட்டு இருந்தோம்னா “பெருச்சாளி” ஆகவும்
எப்போதாவது ஒருமுறை வீட்டுக்கு போயிட்டு வந்துட்டு இருந்தோம்னா “விருந்தாளி” ஆகவும் “தெரிவோம்”

ச ப் பா ணி

‘கை’ மாத்தா கொடுத்த கடனை ‘கால்’ நடையா போய் தான்
கேட்டு வாங்கனும்

மயக்குநன்

காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவே கிடையாது!- செல்வப்பெருந்தகை.
இதுக்கு மேல பின்னால போக அங்கே என்ன இருக்கு..?!

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?

சிறு வயதில் நான் தமிழையும் கற்றிருக்கலாமே என்று அடிக்கடி நினைப்பது உண்டு – பிரதமர் மோடி
அதுக்குள்ளயுமா..? தேர்தலுக்கு இன்னும் நாளிருக்கு..

ArulrajArun

~ நல்லவர்களுக்கு கண்ணு தெரியாது
~ நல்லவர்களை கண்ணுக்கு தெரியாது

ச ப் பா ணி

தொடர்ந்து ரீல்ஸ் பார்த்துட்டே இருந்தால், முதலில் நேரம் போறதே
தெரியாது….

அப்புறம் நாம வீணாப் போறது தெரியவே தெரியாது…

Writer SJB✒️

ஒரு பெண் ஒரு மனநல மருத்துவரை பார்த்து

நான் தூங்கும் போது என் கட்டிலுக்கு கீழே யாரோ இருப்பது போல் உணர்கிறேன் கீழ பாத்தா யாருமே இல்ல எனக்கு தூக்கமே வருவதில்லை என்றாள்

டாக்டர் அவளை பரிசோதித்து விட்டு நீங்க 5 கவுன்சலிங் வரணும் ஒரு கவுன்சலிங் பீஸ் 2000 என்றார்

அதன் பிறகு அந்த பெண் டாக்டரை பார்க்க போகவில்லை

ஒரு நாள் ஷாப்பிங் மாலில் டாக்டர் அந்த பெண்ணை பார்த்து இப்ப எப்படி இருக்கீங்க என்று கேட்டார்

ஒரு ரூபா கூட செலவில்லாம குணமாயிட்டேன் டாக்டர் என்றாள்

எப்படி என்று டாக்டர் கேட்டதும்

தரையில் தூங்குறேன் என்றாள்..!

லாக் ஆஃப்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share