இன்னிக்கு ஆபிஸ் முடிந்து நானும் நண்பரும் ஒன்னா ரயில்வே ஸ்டேஷன் போனோம்…
அப்போ நண்பர்கிட்ட, “எஸ்.ஐ.ஆர்-ல தான் பீகார்ல பாஜகவும் நிதிஷ் குமார் கட்சியும் ஜெயிச்சிருக்குனு அதிமுக சீனியர் திண்டுக்கல் சீனிவாசன் சொல்லிருக்காறே பாத்திங்களானு” கேட்டேன்.
இதுக்கு நண்பரு, நான் கூட மாநிலத்துக்கு ரெண்டு கட்சியும் திட்டங்கள அள்ளி கொடுத்திருக்காங்கனு தப்பா நினைச்சிட்டேனு சொல்லிட்டு ரயில் ஏறிட்டாரு.
நீங்க அப்டேட்ஸ் பாருங்க

balebalu
புதிய உச்சத்தில் முட்டை விலை – செய்தி
இனிமே என்னை ஆம்லெட் மண்டையா, முட்டை கண்ணா ன்னு எல்லாம் கூப்பிடாதீங்க அண்ணே

ச ப் பா ணி
ஓங்கி அறைய முடியாததால் சிலர் போனை பொட்டுனு வைக்கிறாங்க
ArulrajArun
நாம எங்கயாவது போகனும்னு Point to Point Bus ஏறி ஆத்திர அவசரமா உட்கார்ந்து இருப்போம்
ஆனா அப்போ தான் பஸ் கண்டக்டர் எதாவது ஒரு Point ல Bus நிப்பாட்டி பயணிகளை அவசர அவசரமா ஏத்திட்டு இருப்பார்

மயக்குநன்
திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு கடந்த 5 ஆண்டுகளில் 68 லட்சம் கிலோ கலப்பட நெய் விநியோகம்!- சிறப்பு விசாரணைக் குழு ஆய்வில் அதிர்ச்சி தகவல்.
லட்டு கொடுக்கிற திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்கே அல்வா கொடுத்துட்டாங்க போல..?!
எனக்கும் மதிப்பு ஏறி போச்சு

plip plip 2.0
SIR ரை ஒழிக்க வேண்டும்.
ஆனால் அதை எதிர்த்து போராடினால் சம்பளம் கட். -திமுக
~ பாஸ் அப்போ நாம காட்டியும் குடுக்றோம்…seemore

balebalu
அமெரிக்காவிடம் இருந்து முதல் முறையாக LPG இறக்குமதி செய்யும் இந்தியா – செய்தி
அதெல்லாம் இருக்கட்டும் கேஸ் விலை குறையுமா குறையாதா
அதை மட்டும் சொல்லுங்க

ச ப் பா ணி
அலுவல் வேலை இருவகை புடிச்சு செய்வது புடிச்ச மாதிரி செய்வது
Mannar & company
வடையில் ஆயில் இருப்பது போல்தான்,
நடையில் நம் ஆயுள்
இருக்கிறது!
-வாக்கிங்

கோழியின் கிறுக்கல்!!
உடம்பு Feverishஆ இருக்கிறப்ப Leave போடுறதை விட,
மனசு Feverishஆ இருக்கிறப்ப Leave போடுறது,
அதிக நிம்மதியை தரும்!!

லாக் ஆஃப்
