தமிழ்நாட்டில எஸ்.ஐ.ஆர் பணிகள் தீவிரமா நடந்துட்டு இருக்கு… ஆனால் அந்த ஃபார்ம ஃபில் பன்னதாக் மக்கள் கஷ்டபடுறாங்க…
இத பத்தி என் நண்பர்கிட்ட கேட்டேன்.. என்ன நண்பா அவ்வளவு கஷ்டமாவா இருக்கு எஸ்.ஐ.ஆர் பார்ம்னு…
இதுக்கு அவரு… ஆமா நண்பா இதுக்கு குரூப் 1 எக்ஸாமையே எழுதிடலாம் போலனு சொல்றாரு
ஆமாம்… ஆமாம்… இவரு அப்படியே எழுதி பாஸ் பன்னிருவாரு…
நீங்கள் அப்டேட்ஸ் பாருங்க…

Sasikumar J
~ கடையில எல்லா காய்கறியும் பார்த்து பார்த்து வாங்கியாச்சு…!
~ அப்பறம்…!
~ வேறென்ன வீட்டுக்கு போய் திட்டு தான் வாங்கனும்…!

Writer SJB
எதுக்கு தேர்தல் எல்லாம் நடத்தி மக்கள் தந்த வரி பணத்தை வீணாக்க வேண்டும்?
பிஜேபி கூட்டணி ஜெயித்தது என்று தலைமை தேர்தல் ஆணையரை அறிவிக்க சொல்லிடுங்க ஜி..!
ச ப் பா ணி
மற்றவர்கள் கண்ணுக்கு அழகாய்த் தெரிவது looking good
நமக்கே நாம் அழகாய் உணர்வது Feeling good

ArulrajArun
பாஜகவில் இணைந்த அடுத்த நாளே சீட் வாங்கி ஒரே மாதத்தில் சட்டமன்ற உறுப்பினர் ஆன பாடகி மைதிலி தாக்கூர்!
-எது இந்தியாவிலே படிப்பறிவு விகிதம் குறைந்த மாநிலமா இருக்குதே அங்கயா ….

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
Interviewer: ஆரம்பத்துல சம்பளம் கொஞ்சம் குறைவா தான் தருவோம், ஓகே தானே..?
Me: சம்பளம் அதிகமாக தர்ற வரை நானும் வேலை கொஞ்சம் சுமாரா தான் செய்வேன், உங்களுக்கு பரவால்லயா..?

ச ப் பா ணி
வெற்றி படிக்கட்டுல ஒவ்வொன்னா ஏறிப்போனா..
தோல்வி எனும் லிப்ட் கீழ கொண்டு போய் சர்ர்ருனு விட்டிடுது

mohanram.ko
ராகவா லாரன்ஸ் -சுந்தர் சி விலகிட்டாரா?… அப்ப காஞ்சனாவுக்கு வாய்ப்பு கிடைக்குமா…

Writer SJB
எலக்சன்ல தோற்றதும் ரோடு ஷோக்கு தயார் பண்ண கேரவன் வாடகைக்கு தான் விடப் போறீங்க இப்பவே ஷூட்டிங் வாடகைக்கு விட முடியுமானு கேக்குறாங்க என்ன சொல்லட்டும்?4

caroline
பிறர் அன்புக்கு ஏங்குவதை விட பிரியாணி சாப்பிட்டு தூங்குவதே மேல்

லாக் ஆஃப்
