இன்னிக்கு காலைல இருந்தே ஆபிஸ்ல எனக்கும் மேனேஜருக்கும் ஒரே பிரச்சினை…
இதே டென்சன்ல வீட்டுக்கு கிளம்பிட்டேன்… அங்க போய் பிபி செக் பன்னி பாத்தா பிரசர் ரொம்ப அதிகமா இருந்துச்சு… இன்னிக்கும் கூடிருச்சானு கம்முனு படுத்துட்டேன்…
கொஞ்ச நேரத்துல என் மனைவியும் வீட்டுக்கு வந்தாச்சு… அவளும் தினமும் இப்படி கூடிட்டே போனா என்னதான் ஆவறது புலம்பிட்டே இருந்தா…
அதுக்கு நான்… என்னடி என் மேல அவ்ளோ பாசமானு கேட்டேன்…
அதுக்கு அவ…. நான் தங்க விலை டெய்லி கூடிட்டே போகுதுனு கவலைல இருக்கேன்… நீங்க வேற ஏன்-னு கேக்குறா?
நீங்க அப்டேட்ஸ் பாருங்க…

Sasikumar J
காதல் வாழ்க்கைக்கு வாரண்டியும் கிடையாது; கல்யாண வாழ்க்கைக்கு கேரண்டியும் கிடையாது…!
mohanram.ko
என்னடா இது…? வாஸ்து நிபுணரை ஹோட்டல்ல வேலைக்கு வச்சிருக்கீங்க…
ஆமாம்ணே… இட்லி நல்லா வரணும்னா, அவர் தானே முக்கியம்…

மயக்குநன்
பதவி என்பது ‘வெங்காயம்’ போன்றது!- அண்ணாமலை.
தமிழக பாஜக தலைவர் பதவி போனதுதான் மனசுல ‘பெருங்காயமா’ ஆயிடுச்சு போல..?!

Mannar & company
Work from home பண்ண வாய்ப்பு அமைபவர்களுக்குதான்,
அம்மா வீட்டுக்கு போகாத மனைவியும் அமைகிறார்கள்!
-வாழ்வியல்_உண்மைகள்

Writer SJB
ஒரே பாயில் ஒரே போர்வையில் ஒரே ஃபேனுக்கு கீழே நெருக்கியடித்து படுத்தபோது கிடைத்த மகிழ்ச்சி
தனி அறையில் தனி கட்டிலில்
ஏசி போட்டு தூங்கும் போதும் கிடைப்பதில்லை..!

mohanram.ko
நீ பார்த்துட்டு போனாலும், பார்க்காம போனாலும்,
நான் பாத்துக்கிட்டே தான் இருப்பேன்….
-சிசிடிவி

balebalu
ENT டாக்டர் : என்ன இன்னிக்கு வழக்கத்துக்கு மாறா இத்தனை பேஷண்ட் காது வலி ன்னு வந்திருக்காங்க
நர்ஸ் : ஏதோ புதுசா அனிருத் மியூசிக் ஆல்பம் ரிலீஸ் ஆகியிருக்காம்

ச ப் பா ணி
100% மகிழ்ச்சியை கொடுப்பதில் முதலாவதாக வருவது..
போன் சார்ஜ் 100% இருப்பது

மயக்குநன்
திமுகவினரை குறி வைத்து அடிக்கும் பாஜகவுக்கு நான் முதல் பலி ஆகிவிட்டேன்!- அமைச்சர் கே.என்.நேரு.
யாரும் தொடமுடியாத ‘பாகுபலி’னு உங்களை நெனச்சோமே தலைவரே..!

கோழியின் கிறுக்கல்!
திருமண வாழ்க்கையும் Stock Marketம் ஒண்ணு தான்,
கொடுக்கிற மாதிரி கொடுத்து இருக்கிறதையும் புடுங்கிடும்!!

லாக் அப்
