இன்று இணையதளங்களில் வைரலான மீம்ஸ் மற்றும் ட்ரோல்களை பார்த்து ரிலாக்ஸ் ஆகலாம் வாங்க

balebalu
சென்னையில் 35.58% வாக்காளர்கள் நீக்கம் – செய்தி
அப்படியே 100 % வாக்காளர்கள் இருந்தாலும்
எங்கம்மா ஓட்டு போட வர போறாங்க
லீவு கிடைக்குதே ன்னு வீட்டுக்குள்ள தான் இருக்க போறாங்க

ச ப் பா ணி
விதியை மீறி கட்டுவது கட்டிடங்கள்,
விதியையும் மீறி கட்டுவது கல்யாணம்

Mannar & company
தேதிகள் மாறுது..
காலங்கள் மாறுது.. ஏன்
காலண்டர் கூட மாறுது நம்ம வாழ்க்கை மட்டும் மாற மாட்டேங்குது!

ArulrajArun
கடன்காரன்: நீ பாா்த்துட்டு போனாலும் பாா்க்காம போனாலும்…
பாா்த்துகிட்டேதான் இருப்பேன்…

டிங் டாங்
மழை வெயிலென எந்த சூழலிலும் ஓய்வின்றி உழைப்பதில்
குடைக்கு நிகர் எதுவுமில்லை

balebalu
அதிமுக வாய்ஸில் ஈரோட்டில் விஜய் பேச்சு – செய்தி
கங்கா ஜெயலலிதாவா தன்னை நினைச்சுகிட்டா
கங்கா ஜெயலலிதாவா மாறினா

ArulrajArun
திருச்சியில் 3,31,787 வாக்காளர்கள் நீக்கம்!
suppose நாம உயிரோடு இருந்து வாக்காளர் பட்டியல்ல நம்ம பெயர் இல்லன்னா அந்த அதிகாரி ங்க கேட்கிற Document summit பண்றதுக்குள்ளயே உயிர் போயிடும் போலயே …

அண்ணாச்சி
அன்புமணி மீதான வழக்குகளை சிபிஐ விசாரிக்க வேண்டும் : ராமதாஸ்
..தந்தை மகற்காற்று நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல்.
-பொதுவா…சொன்னேன்

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
ஆபிஸ்ல சரியா வேலை செய்யாத ஒருத்தனை நேரடியா திட்றதுக்கு பதிலா, டீம்ல உள்ள இன்னொருத்தனை எல்லார் முன்னாடியும் ஆஹா ஓஹோன்னு மேனேஜர் பாராட்றதுக்கு பேர் தான், constructive criticism !

ச ப் பா ணி
அப்பாவி மாதிரி முகத்தை வைத்துக் கொண்டு
அட்ரெஸ் கேட்பது ஒரு கலை

Mannar & company
தவெகவில் இருந்து விலகி லட்சிய ஜனநாயக கட்சியில் இணைந்தார் நடிகர் தாடி பாலாஜி!
“லட்சிய ஜனநாயக கட்சி”ன்னு ஒண்ணு இருப்பதே இப்பதான்யா தெரியும்!

டிங் டாங்
இருந்தாலும் இல்லாவிட்டாலும் பைத்தியம் பிடிக்க வைப்பதில் மொபைல் போனும்
பொண்டாட்டியும் ஒன்னு

லாக் ஆஃப்
