இன்று இணையதளங்களில் வைரலானவை
ச ப் பா ணி
தீபாவளிக்கு புதுத் துணி எடுக்கிறவன் மனுசன்
புது போன் எடுக்கிறவன் பெரிய மனுசன்

Mannar & company
காலத்தால் அழியாத விஷயங்களில் ஒன்றாகிவிட்டது குலோப்ஜாமுன் மாவு பாக்கெட் ஒன்று வாங்கினால் இன்னொன்று இலவசம் என்பது!
கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
எல்லரும் திங்கட்கிழமை காலை பரபரப்பா ஓடிட்டு இருக்கும் போது, ரெண்டு பேர் மட்டும் ஓடுறவங்களை பார்த்து ரசிச்சு சிரிச்சுட்டு இருந்தாங்களாம்..
சலூன்கடைக்காரரும் கறிக்கடைக்காரரும்..

mohanram.ko
ரசிக வெறியும் சினிமா மோகமும் மக்களிடம் விதைத்த அனைவருமே குற்றவாளிகள் தான்….
மயக்குநன்
பாஜக அடுத்தக் கட்சி பிரச்சினையில் தலையிடாது!- நயினார் நாகேந்திரன்.
அதான்… அதிமுகவை தங்களோட சொந்தக் கட்சியா நினைக்க ஆரம்பிச்சிடுச்சோ..?!

கோழியின் கிறுக்கல்!!
புரட்டாசி மாசத்தில கறி சாப்பிடுறவன் கூட சாப்ட்டு முடிச்சுட்டு கம்முன்னு இருக்கோம்,
ஆனா சாப்பிடாதவங்க தான் என்னவோ ஜெயில்ல அடைச்சு களி திங்க சொன்ன மாதிரி கதறிட்டு இருக்காங்க!!

Mannar & company
பசங்களுக்கு லீவு விட்டால் ஸ்கூல்ல
“Home work” தருவாங்கன்னு பயம்,
பெரியவங்களுக்கு லீவு விட்டால் Home ல “Work” சொல்லுவாங்கன்னு பயம்!

balebalu
உடனே முறையீடு பண்ணிட்டாங்க மாமா
சபாஷ் மாப்ள பாதிக்கப்பட்டவங்களுக்கு சரியான சிகிச்சை அளிக்க டாக்டர் கிட்ட தான
இல்ல சதி நடந்தது ன்னு கோர்ட்டுல முறையீடு பண்ணிட்டாங்க மாமா
லாக் ஆஃப்