ADVERTISEMENT

யார் அந்த ராமர்? அப்டேட் குமாரு

Published On:

| By Kavi

இன்னிக்கு வழக்கம் போல நண்பர்களோடு டீ கடைக்கு போய் டீ குடிச்சிகிட்டே நியூஸ் பாத்துட்டு இருந்தோம்…

செங்கோட்டையன், ஹரித்வாருக்கு ராமர தரிசிக்க போறதா பேட்டி கொடுத்த செய்தி ஓடிட்டு இருந்துச்சு…

ADVERTISEMENT

அதை பாத்த நம்ம நண்பர், ஹரித்வாருல மானசா, சண்டி தேவி கோயில் தான் இருக்கு… ராமர் எங்க அங்க இருக்காரு… அவரு அயோத்தில தான இருக்காருனு சொன்னாப்ல…

அப்ப செங்கோட்டையன் பார்க்க போற ராமர் யாருனு நண்பர் கேட்டுகிட்டே இருந்தப்ப, நியூஸ்ல ஒரு பிரேக்கிங்…

ADVERTISEMENT

என்னடானு பாத்தா அமித்ஷா வீட்டில் செங்கோட்டையனாம்…

அப்படினா செங்கோட்டையனின் ராமர் அமித்ஷாவானு பேசிகிட்டே கிளம்பிட்டோம்…

ADVERTISEMENT

நீங்க அப்டேட்ஸ் பாருங்க…

Mannar & company

சூரியன், சந்திரன், பூமி எல்லாம் ஒரே வரிசையில வந்தால் கிரகணம்,
தூக்கம், சோம்பல், எரிச்சல் எல்லாம் ஒரே வரிசையில் வந்தால் திங்கட்கிழமை

செங்காந்தள்

சுகர் இருப்பவர்களுக்கு உப்புமாகவும்,
சுகர் இல்லாதவர்களுக்கு கேசரியாகவும் இருக்கிறது ரவை

𝙼𝚛.𝙹𝚘

கருப்பும் வெள்ளையுமா சேர்ந்து எம்புட்டு அழகா இருக்கு
என்ன மாப்ள நேத்து சந்திர கிரகணம் பார்த்தீங்களா
அட என் தலை முடிய சொன்னேன் மாமா…

ArulrajArun

ஒருசிலர் மனதை மூடி வைத்து கொள்வதால் தான் ஒருசிலர் மனம் திறந்து பேசுகின்றனர்

amudu

பல இயற்கை பொருட்கள் விற்கும் அங்காடிகளில், கடையின் பெயர் பலகையிலும், பாக்கெட்டில் ஒட்டப்பட்டு இருக்கும் ஸ்டிக்கர்களிலும் மட்டுமே இயற்கை இருக்கிறது.

ச ப் பா ணி

அதிமுகவை யாராலும் உடைக்க முடியாது” – எடப்பாடி பழனிசாமி
ஆமாமா.. ஏற்கனவே உடைந்ததை யாராலும் உடைக்க முடியாது

mohanram.ko

ஜிஎஸ்டி இல்லாத பரோட்டாவை வாங்கிட்டு வாப்பா…
அப்படின்னா….
இன்னைக்கு போட்ட பரோட்டாவா வாங்கிட்டு வர சொன்னேன் ப்பா..

மயக்குநன்

ஜிஎஸ்டி வரி விகித மாற்றம் நாட்டின் ‘வளர்ச்சி’க்கு ஊக்கம் அளிக்கும்!- மோடி.
அப்ப… இவ்ளோ நாளா நாடு ‘தளர்ச்சி’யில் இருந்துச்சுங்கிறத ஒத்துக்கறீங்களா ஜீ..?!

லாக் ஆஃப்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share