அரிய வானியல் நிகழ்வான முழு சந்திர கிரகணம் இன்னிக்கு நடந்துச்சு. இத பாத்து ரசிச்சிட்டு போன்ல நாலு, அஞ்சு போட்டோஸ் எடுத்துக்கிட்டு ஃப்ரண்டு ரூமுக்கு போனேன்.
அங்க நம்ம நண்பர் இழுத்து போத்தி படுத்திருந்தார்.
வாங்க நண்பா கிரகணம் தெரியுது போய் பார்க்கலாம்னு கூப்பிட்டேன்.
அய்யய்யோ வேணாம் நண்பா… ஏற்கனவே ஒரு மாதிரி இருக்கு… அதை பார்த்து மயக்கம் வர போகுதுனு தூங்கிட்டாரு…
இந்த காலத்திலையும் இதெல்லாம் நம்புறீங்களான்னு கேட்டுட்டு ஃப்ரண்டு ரூம்ல இருந்து கிளம்பிட்டேன்.
நீங்க அப்டேட்ஸ் பாருங்க
ச ப் பா ணி
வியர்வை சிந்தி வாங்கியதில் பாடி ஸ்ப்ரேவும் ஒன்று

Sasikumar J
~ ஏண்டா இப்படி தன்னந்தனியே புலம்பிகிட்டு இருக்க…!
~ என்கிட்ட கிட்ட பேச தோழி யாரும் இல்லையே அதான் AI கூட பேசிட்டு இருக்கேன்…!!
Mannar & company
கல்யாணத்துக்கு முன்னாடி ராயல் என்ஃபீல்டு புல்லட் சத்தம் பிடிக்கும் ஆண்களுக்கு,
கல்யாணத்துக்கு அப்புறம் மிக்ஸி சத்தம் கூட பிடிக்க மாட்டேங்குது!

மயக்குநன்
மைதேயி, குகி குழுக்கள், மத்திய அரசு இடையே சுமுக உடன்பாடு!- மணிப்பூர் மாநிலத்தில் அமைதி திரும்புகிறது.
அப்பாடா… ஒருவழியா நம்ம ஜீ மணிப்பூருக்கு போக வேண்டிய நேரம் வந்துடுச்சு..!

நெல்லை அண்ணாச்சி
ஐநா பொதுச்சபை கூட்டத்தில்
மோடி பங்கேற்க மாட்டார்…
-உள்ளூர் Parliament லயே
கலந்துக்க மாட்டாரு…

amudu
கிராம மக்களின் ஷாப்பிங் மால்களுக்கு சந்தை என்று பெயர்.
கடைநிலை ஊழியன்
நாய்கள் ஜாக்கிரதை – அன்று !!
நாய் ஆர்வலர்களிடம் ஜாக்கிரதை – இன்று !!
தர்மஅடி தர்மலிங்கம்
“விஜய் தாக்கத்தை ஏற்படுத்துவார்; ஆனால்… நாங்கள் ஆட்சி அமைப்போம் என்பதுநம்பிக்கை” – அண்ணாமலை!
இது மூடநம்பிக்கையா இருக்கும் போலயே.?!

மயக்குநன்
பாமகவினர் ‘எதிர்பார்க்கும்’ கூட்டணியை விரைவில் அறிவிப்பேன்!- அன்புமணி.
அதாவது ராமதாஸ் ‘எதிர்க்கும்’ கூட்டணியை அறிவிக்கப் போறீங்க… அப்படித்தானே..?!
கோழியின் கிறுக்கல்!!
படிச்சா பெரிய ஆள் ஆகலாம்னு அம்மா சொன்னதுக்கு,
எப்படியும் பெரிய ஆள் ஆகத்தானே போறேன், அதுக்கு எதுக்கு படிக்கணும்னு கேட்கிறாங்க மகள்!!

லாக் ஆஃப்