இன்னைக்கு டீக்கடைக்கு போயிருந்தேன். அங்க ஒருத்தர் “பொட்ட புள்ள எல்லாம் ஸ்கூலோடா நிப்பாட்டிரனும், காலேஜ்லாம் எதுக்கு”னு கேட்டார்.
அவர்கிட்ட “உங்க மனைவிக்கு சொல்ல கூடாத இடத்தில் கட்டி வந்தா யார்கிட்ட போய் காட்டுவீங்க?”னு கேட்டேன்.
அதுக்கு அவரு, “இது என்ன கேள்வி ஒரு நல்ல லேடி டாக்டர்ட காட்டுவேன்”னு சொன்னாரு
“உங்கள மாதிரி எல்லா பேரண்ட்ஸும் பிளஸ் 2 ஓட பொண்ணுங்க படிப்பை நிறுத்திட்டா நாளைக்கு லேடி டாக்டர் எப்படி இருப்பாங்க ?”னு திருப்பி கேட்டேன்.
“சாரி சார் என் பொண்ண காலேஜ்ல சேர்த்துடுறேன்”னு சொன்னாரு. சந்தோஷமா டீ குடிச்சிட்டு கிளம்பிட்டேன்.
நீங்க அப்டேட்ஸ் பாருங்க…

ச ப் பா ணி
பிரிக்ஸை ஆதரிக்கும் நாடுகளின் பொருளுக்கு 10 % கூடுதல் வரி விதிக்கப்படும்:
-டிரம்ப்
எதிர்க்கும் நாட்டிற்கு 20% வரி குறைப்பீங்களா பாஸ்

சரண்யா
வேலைக்கு செல்பவர்கள் காலை நேரத்தில் 1 hour permission கேட்பதற்கு உகந்த நாள் திங்கள்கிழமை…
iQKUBAL
நீ எந்த சொந்தக்காரன கேடுகெட்டவன் கேவலமானவன்னு நெனைக்கிறியோ, அவனுக்கு நீயும் ஒரு சொந்தக்காரன் தான்..

திருப்பூர் சாரதி
மில்க் பிஸ்கெட்டில் தொடங்கி
கிரீம் பிஸ்கெட்டுடன் பயணித்து
மாரி பிஸ்கட்டில் முடிவடைகிறது வாழ்க்கை!
செங்காந்தள்
பகல் கொள்ளை மட்டுமல்ல…
இரவும் கொள்ளை போகிறது ஸ்மார்ட்
போன்களால்…!!!

ச ப் பா ணி
தமிழ்நாட்டில் தென்மேற்குப் பருவமழை இன்று வரை இயல்பை விட 1% கூடுதலாக பெய்துள்ளது
-மாமழை போற்றுதும்

கோவிந்தராஜ்
சட்ட ஒழுங்கு பத்தி அதிமுக பேசுறான்.
பெண்கள் பாதுகாப்பு பத்தி பாஜக பேசுறான்.
Charted Flight-ல போறவன் Airport வேணாம்னு பேசுறான்.
ஊராடா இது.
எனக்கொரு டவுட்டு!?
ஜி பே, போன் பே வந்த பிறகு மீதி காசுக்கு சாக்லேட் கொடுக்குற பழக்கம் காணாம போயிருச்சு..

மயக்குநன்
பாமக எம்எல்ஏ அருளின் கட்சிப் பதவி பறிப்பு!- அன்புமணி அதிரடி.
கொஞ்ச நாளா கட்சியே ‘அருள்’ இல்லாமதான் இருக்கு..!
Mannar & company
நமக்கு 2026-ல் ஆட்சிக்கு வருவது முக்கியமல்ல.
-தமிழக பாஜக தலைவர்
நயினார் நாகேந்திரன்!
ஆமா மோடி ஜீக்குதான் முக்கியம்.

சரவணன். 𝓜
மக்களை காக்க முன்கள வீரனாக முன்னே செல்கிறேன்: எடப்பாடி பழனிசாமி
அப்படி போகலைன்னா பின்னாடி அமலாக்கத்துறை வரும் தானே..
லாக் ஆஃப்