வீட்டுக்கு விசிட் அடிக்கும் சூரியன்: அப்டேட் குமாரு

Published On:

| By Kavi

இன்னைக்கு வேலைய முடிச்சிட்டு 4 மணிக்கு வீட்டுக்கு கிளம்புனேன். சாயந்தர நேரமா இருந்தாலும் வெப்பம் தாங்க முடியல. இதுல டிராபிக் வேற…

பஸ்ல பக்கத்துல உட்கார்ந்தவரு மே மாசத்துக்கான ட்ரைலர் போலனு புலம்புராரு…

ADVERTISEMENT

அதுவும் சரிதான் மே மாசத்துல வீட்டுக்கே விசிட் அடிக்கும் போல இந்த சூரியன்…

சரி, நீங்க அப்டேட்ஸ் பாருங்க…

ADVERTISEMENT

mohanram.ko
பாஸ்…. ஆணுக்கு ஆண் டாக்டர் ,பெண்ணுக்கு பெண் டாக்டர்… குழந்தைகளுக்கு குழந்தை தானே டாக்டரா இருக்கணும்….

கோழியின் கிறுக்கல்!!
தவறுகளை தட்டிக் கேட்பதை விடுங்கள்,
சுட்டிக் காட்டுவது கூட திருமண வாழ்வில் முடியாது

ADVERTISEMENT

ச ப் பா ணி
ஒவ்வொரு வெய்யில் காலமும் என்ன சொல்லுது நம்மிடம்?
இன்னுமா உங்க வீட்டில ஏ.சி வாங்க மாட்டலைனு

mohanram.ko
மீனவர்கள் பிரச்சனைக்கு கடிதம் எழுதினா போதுமா ?!- விஜய்
எழுதினால் மட்டும் போதாது ….. அதை போஸ்ட் பாக்ஸில் போடணும்

செங்காந்தள்

தேர்தல் நேரத்தில் பெரிய கட்சிகள் சேர்த்துக் கொள்ளாத போது புதிய கட்சி தொடங்குவது எளிதாகிறது…!!!

படிக்காதவன்

தன்னை நியாயப்படுத்திக்க
நாம கஷ்டப்படுற மாதிரிதான் மத்தவங்களும் கஷ்டப்படுவாங்கனு சில நேரங்களில் மனம் உணருவதில்லை…

அண்ணாச்சி

கூட்டணிக்காக காங்கிரஸ் ” தியாகம் ” செய்துள்ளது…
மாணிக்கம் தாகூர்
– ..அடங்கமாட்டேன்றாரே…!!

Selva Bharathi

இறுகப் பற்றினால் விலகி ஓடும்,
விட்டு விட்டால் நெருங்கி வரும்,
உலகத்தில் பல விஷயங்கள் அப்படித்தான்.

செல்வம் அரசுப்பள்ளி ஆசிரியர்

நெடுங்காலம் புகைந்து கொண்டிருப்பதை விட, ஒரு கணமேனும் பற்றி எரிவதே மேல்…

லாக் ஆஃப்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share