இன்னிக்கு நைட் ரூம்ல பிரண்ட்ஸ் கூட பேசிகிட்டே எல்லோரும் அவங்கங்க பெட்ல செட்டில் ஆனோம்.
அப்பா நம்ம நண்பர், நாளைக்குதான் இந்த வருசத்தோட கடைசி ஞாயிறு, அதனால நாளைக்காவது ஞாயிற்று கிழமைய என்ஜாய் பன்னணும்… மறக்க முடியாத ஞாயிற்று கிழமையா மாத்தனும்னு சொன்னாரு…
இத கேட்ட இன்னொரு நண்பர், என்ன நண்பா… நைட்ல பகல் கனவா…. முதல்ல நாளைக்கு காலையிலேயே எழுந்துருப்பிங்களானு பாப்போம்னு சொல்லிட்டு தூங்கிட்டாரு…
நீங்களும் நாளைக்கு மறக்க முடியாத ஞாயிறா மாத்திடுங்க…
இப்போ அப்டேட்ஸ் பாத்துட்டு ரிலாக்ஸ் ஆகலாம் வாங்க…

iQKUBAL
உனக்கு காசு குடுத்து கண்டதையும் வாங்குறதுக்கு அமேசான், பிளிப்கார்ட்..
ஓசில காலண்டர் வாங்குறதுக்கு மட்டும் அண்ணாச்சி கடை கேக்குதோ..

Mannar & company
ஒடிசாவில் இடைநிற்றலைத் தடுக்க மாணவர்களுக்கு இலவச பேருந்து பயணம் அறிவிப்பு!
-செய்தி
இதுக்கெல்லாம் விதை இருபது வருடங்களுக்கு முன்பே நான் போட்டது.
-கலைஞர்

mohanram.ko
மாதக் கடைசியில் செருப்பு வாங்கினாலும், ‘கையை கடிக்குது’

ச ப் பா ணி
எங்கிருக்கனு? கேட்கப்படுவதற்கு
“வந்துட்டேன்னு” சொல்வது
முக்காலத்திற்கும் பொருந்தும் பதில்

Sasikumar J
அங்க பாருடி பேண்ட் பாக்கெட்ல கை வச்சிக்கிட்டு எப்படி ஸ்டைலா போறான் பாரு…!
நானே குளிர் அதிகமா இருக்குன்னு பேண்ட் பாக்கெட்ல கை விட்டுட்டு போறேன்…!!

Mannar & company
இணை பிரியாம இருந்தால் ‘Life’ நல்லாருக்கும் என்பதற்கு மிகச்சிறந்த இரண்டு உதாரணங்கள்…
“WIFE” ” WIFI”
கொஞ்சம் தள்ளிப் போனாலும் பிரச்சினைகள் தான்!

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
தேயிலை அல்லாத மூலிகை மூலம் உருவாக்கப்படும் பானங்களுக்கு Herbal Tea, Flower Tea என பெயர் வைக்கக் கூடாது, மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும்” – FSSAI உத்தரவு
அப்படியே எங்க ஆபிஸ் கேன்டீன்ல வைக்கிற பிரவுன் கலர் திரவத்தையும் டீ ன்னு சொல்ல கூடாதுன்னு உத்தரவு போடுங்கய்யா..

Sasikumar J
வழக்கமா இடியாப்பம் பிழியிறதுல தான் சிக்கல் இருக்கும், இப்ப இடியாப்பம் விக்கிறதுலையும் சிக்கலா இருக்கு….!

mohanram.ko
நியாயமே இருந்தாலும், மனைவியிடம் ‘male முறையீடு’ செய்வது வேஸ்ட்….

ச ப் பா ணி
டி.வி பார்க்கும் நேரத்தைவிட சேனல் மாற்றும் நேரமே அதிகம்
கோழியின் கிறுக்கல்!
‘ஏன்’ என்று கேட்க ஆளில்லாதது,
சிலருக்கு வரம்,
பலருக்கு சாபம்!!

லாக் ஆஃப்
