என்னதான் ராசி பலனோ தெரியல… : அப்டேட் குமாரு

Published On:

| By Kavi

இன்று இணையதளங்களில் வைரலான மீம்ஸ் மற்றும் ட்ரோல்களை பார்த்து ரிலாக்ஸ் ஆகலாம் வாங்க…

சப்பாணி

ADVERTISEMENT

கடவுள் நல்லவங்களை அதிகம் சோதிப்பாரு? என்பதால் தான் எல்லாரும் கெட்டவங்களா மாறிடுறாங்க

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?

ADVERTISEMENT

பாஜகவிற்கு தைரியம் இருந்தால் ரூபாய் நோட்டுகளில் இருக்கும் காந்தியின் படத்தை மாற்றிக் காட்டட்டும்” – டி.கே.சிவகுமார்

# காந்தி பி லைக்: டேய் நிறுத்து.. எவனுந்தான் ரூபாய் நோட்டை பத்தி எதுவும் பேசலயே.. நீ எதுக்கு என் படத்தை மாத்த சொல்லி சும்மா கத்திட்டு இருக்க..?

ADVERTISEMENT

iQKUBAL 

Gym ஓனர் :~ மாசம் 500 ரூபாய் தம்பி..

யோவ்.. தேவையில்லாம பேசாத.. NewYear-க்கு Gym தொறந்துருப்பியா.. மாட்டியா

Mannar & company™

காலண்டரில் தாளை கிழிக்கிறோம்னு நினைக்கிற, ஆனா அதுதான் உன்னோட நாளை கிழிச்சுகிட்டு இருக்குன்னு தெரியலை பார்த்தியா..!

— காலண்டர்

mohanram.ko

நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்… 

பேசி….. நான் அடி வாங்கணும் , அதானே

ச ப் பா ணி

நகைக்கடைக்கு வந்திருக்கியே எத்தனை பவுன் எடுக்கப் போற?

ஒரு கிராம்ல மோதிரம்

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?

“234 தொகுதிகளிலும் எடப்பாடி பழனிசாமியே போட்டியிட வேண்டும்!” -அதிமுக ஐடி விங் வலியுறுத்தல்

– இதை பார்த்தா, வலியுறுத்தினது அதிமுக ஐடி விங் மாதிரி தெரிலயே, திமுக ஐடி விங் மாதிரில்ல தெரியுது..?

Mannar & company™

கடவுளே.. போன வருசமும் என்னை ஏமாத்திட்ட,

இந்த வருசமும் அப்படித்தான் இருந்துச்சு 

இனி வரப்போற வருசத்திலேயாவது என் கஷ்டங்களையெல்லாம் போக்கிடுப்பா..

கடவுள்: அண்ணனுக்கு ஒரு ஊத்தாப்பம்..

.

கோழியின் கிறுக்கல்!!

வாழ்க்கையில் மகிழச்சி ‘செல்லோ டேப்’ மாதிரி தான்,

எங்க ஆரம்பிக்குதுன்னு கண்டுபிடிக்கவே முடியாது!!

லாக் ஆஃப்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share