இன்று சமூக வலைதளங்களில் வைரலான மீம்ஸ் மற்றும் சுவாரஸ்ய ட்வீட்களை இன்றைய அப்டேட் குமாரில் பார்க்கலாம்.

Sasikumar J
வேகமாகவும் இல்லாமல், மெதுவாகவும் இல்லாமல் எப்போதும் போலவே நிதானமாக வருகிறது திங்கட்கிழமை…!

ArulrajArun
~ ஜிம்முக்கு போறேன் மச்சான் டீ பலகாரம் எதுவும் சாப்பிடுறது இல்ல – New year வரப்போகுது போல
~ நேத்துல இருந்து குடிக்கிறத விட்டுட்டேன் மச்சான் – கோயிலுக்கு மாலை போட்டு இருக்கான் போல

ச ப் பா ணி
அங்காளம்மன் துணையுடன் வந்த லாரி ஆக்சிடண்ட் ஆனது

மயக்குநன்
சர்க்கரை நோய் இருந்தால் அமெரிக்க விசா கிடையாது!- ட்ரம்ப் அரசு உத்தரவு.
கண், கால், நரம்பு, சிறுநீரகம், இதயம்- இவற்றை எல்லாம் சர்க்கரை நோய் பாதிக்கும்னு சொன்னீங்க… அமெரிக்க விசாவைப் பாதிக்கும்னு நீங்க சொல்லலையே டாக்டர்..?!

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
ஆபிஸ் லேப்டாப்களுக்கு மனித உணர்வுகளை ஸ்மெல் பண்ண கூடிய சக்தி இருக்கு..
ஒரு வேலையை அவசரமா முடிச்சாகனும்னு நினைச்சா, உடனே எதாவது மக்கர் பண்ணி ஸ்வோவாகி ரீஸ்டார்ட் ஆகி என்ன எல்லாம் டார்ச்சர் பண்ண முடியுமோ அத்தனையும் பண்ணும்..

Mannar & company
என்னதான் ஐந்து விரல்களும் தனித்தனி பெயர்களை கொண்டதாக இருந்தாலும் சாப்பாடு என வரும்போது ஒற்றுமையாக செயல்பட ஆரம்பித்துவிடுகிறது!

ArulrajArun
~ நான் கேட்ட உடனே அவசரத்துக்கு பணம் கொடுத்து உதவியதற்கு நான் வாழ்நாள் பூரா உங்களுக்கு கடன் பட்டு இருக்கேன்
~ ஏய் இந்த டகால்டி வேலை தான் வேணாங்கிறது வாழ் நாள் பூரா கடன் பட வேண்டாம் நீ சீக்கிரமா வாங்கிய கடனை திருப்பி குடுத்தா போதும்

தர்மஅடி தர்மலிங்கம்
ஒரு கவுன்சிலர் கூட இல்லாத தவெக தனக்கும் திமுகவுக்கும் போட்டி என்பது விந்தையிலும் விந்தை – நயினார் நாகேந்திரன்
அதே… தவெகவிடம் கூட்டணிக்காக பாஜக மறைமுகமா எல்லா வகையிலும் அழைப்பு விடுப்பது விந்தையிலும் விந்தையில் வராதுங்களா…??

மயக்குநன்
தேர்தல் ஆணையம் என்னை அங்கீகாரம் செய்துவிட்டார்கள்!- அன்புமணி.
தைலாபுர ஆணையம்தான் அங்கீகாரத்தை ரத்து செஞ்சுடுச்சு போல..?!

ச ப் பா ணி
In office
என்ன தலைவலினு சொன்னீங்க? ட்ரீட் கொடுக்கிற இடத்துக்கு முதல் ஆளா வந்திருக்கீங்க
யாரோ ட்ரீட் தர்றாங்கனு சொன்னதும் தலைவலி பறந்து போயிடுச்சு

BEN MEMES
~ ப்ரோ நானும் abroad வரலாம்னு இருக்கேன் உங்க suggestion சொல்லுங்க…
~ கண்டிப்பா வாங்க ப்ரோ நல்லா சம்பாதிக்கலம், சீக்கிரமா வீடு வாசல் வாங்கி செட்டில் ஆயிடலாம்…
~ என்ன ப்ரோ இப்படி சொல்றிங்க…
~ நான் வெளிநாட்டுக்கு வந்தா எவ்ளோ கஷ்டம் இருக்கும்னு explain பண்ணி better இங்கேயே இருங்கனு சொல்லுவேன், அத கேட்டுட்டு நான் ஏதோ பொறாமைல சொல்றேன்னு மத்தவங்க கிட்ட சொல்லுவீங்க, எதுக்கு வம்பு நீங்களே வந்து பட்டு தெரிஞ்சிக்கோங்கோ ப்ரோ….
சொன்னா புரியாது.

லாக் ஆஃப்
