அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்திய பொருட்களுக்கு வரி மேல வரி போடுறாரு… அடுத்த 24 மணி நேரத்துல கூடுதல் வரி விதிக்கப்படும்னு இன்னிக்கு ஒரு குண்டு தூக்கி போட்ருக்காரு…
இதை இன்னிக்கு நண்பர்கிட்ட சொல்லிட்டு இருந்தேன்… அவரு என்ன டென்சன் இருந்தாருனு தெரியல, “நாம கட்டாத வரியானு” ஒத்த வார்த்தையில சொல்லிட்டு கிளம்பிட்டாரு….
நீங்க அப்டேட்ஸ் பாருங்க…

நெல்லை அண்ணாச்சி
இந்தியா – பாக்கிஸ்தான் போரை நான்தான் நிறுத்தினேன்..,
” மீண்டும் “… டிரம்ப்
-திரும்ப… திரும்ப…சொல்ற…!!
திருப்பூர் சாரதி
அதெல்லாம் நாம மக்களுக்குப் போட்ட வரியோட லிஸ்ட்டு…
இது ட்ரம்ப்பு நமக்குப் போட்ட வரியோட லிஸ்ட்டு!

செங்காந்தள்
லேஸ் பாக்கெட்டைப் பிரிக்கும் போதெல்லாம் ‘பெருத்த’ ஏமாற்றமே மிஞ்சுகிறது…!!!
mohanram.ko
ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையின்போது, மோடியும், ட்ரம்பும் தொலைபேசியில் பேசவே இல்லை!- அமைச்சர் ஜெய்சங்கர்
அறிக்கை விட்டாலே அதை அப்படியே கேட்டு நடப்போம்…. போவியா…

எனக்கொரு டவுட்டு!?
தோனி சென்னை ஸ்டேடியத்துல விளையாட வரும் போது வரும் சத்தத்தை விட அதிகம்பா.
எங்க?
இந்தியா இங்கிலாந்து டெஸ்ட் மேட்ச்லயா
டெஸ்ட் மேட்சா?
தலைவன் தலைவி படத்துலப்பா..

மயக்குநன்
ரூ.5 கோடி மோசடி செய்த வழக்கில் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் கைது!- டெல்லி போலீஸ் நடவடிக்கை.
கண்ணா ‘களி’ தின்ன ஆசையா..?
Sasikumar J
~ என்ன ஒரு ஆக்டிங்…
~ எந்த படத்துல…
~ படமா, ஆபீஸ்ல வேலையே இல்லை அப்படி இருந்தும் வேலை செய்யுறது போலவே நடிக்குற…!

கோழியின் கிறுக்கல்!!
மனைவி கோபமாக ‘ஒண்ணுமில்லை’ என்றுக் கூறினால்,
‘ஆயிரம் இருக்கு…ஆனா உன் கிட்ட சொல்ல முடியாது’ என்று பொருள்!!

லாக் ஆஃப்