கரூர் அரசு மருத்துவமனையில் போதுமான மருத்துவர்கள் இல்லை என்று கூறப்படும் நிலையில் திருச்சியில் இருந்து கரூருக்கு மருத்துவர்கள் விரையவுள்ளனர்.
கரூரில் இன்று (செப்டம்பர் 27) மாலை நடந்த விஜய்யின் பிரச்சாரத்தின் போது கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 13 பேர் உயிரிழந்திருப்பதாக மாவட்ட ஆட்சியர் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கரூர் அரசு மருத்துவமனையில் போதுமான மருத்துவர்கள் இல்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
இதுதொடர்பாக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில், ‘முதல்வர் சொல்லி கரூர் மருத்துவமனைக்கு சென்று கொண்டிருக்கிறேன். திருச்சியில் இருந்து ஒரு மருத்துவக்குழு கரூர் சென்றுக்கொண்டிருக்கிறது. மக்களுடைய உயிரை காப்பாற்ற வேண்டும்’ 9.30 மணிக்கு சென்னையில் இருந்து ரயில் மூலம் புறப்படுகிறேன் என்று தெரிவித்தார்.