திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள முஸ்லீம் லீக், மஜக, மதிமுக கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்துள்ளன.
திமுக கூட்டணியில் 2 தொகுதிகளில் போட்டியிடும் இந்திய யூனியன் -முஸ்லிம் லீக் கட்சியில்
1. பாபநாசம் – ஷாஜகான்
2. வாணியம்பாடி – சையது பாரூக் ஆகியோர் களம் காண்கின்றனர்.
மஜக சார்பில் தமிமுன் அன்சாரி சிதம்பரம் தொகுதியில் போட்டியிருகிறார்.
மதிமுக சார்பில் மொடக்குறிச்சி – செந்தில்நாதன்
மதுரை தெற்கு – பூமிநாதன்
கடையநல்லூர் – ராஜேந்திரன்
சீர்காழி – செந்தில் செல்வன் (தனி சின்னம் ) ஆகியோர் போட்டியிடுகின்றனர் என அக்கட்சி பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.
மதிமுக இந்த தொகுதிகளில் தான் போட்டியிடுகிறது. வேட்பாளர்கள் இவர்கள் தான் என்று நமது மின்னம்பலத்தில் கடந்த மார்ச் 26ஆம் தேதி செய்தி வெளியிட்டிருந்தோம். அதன்படி அறிவுப்பு வெளியாகியுள்ளது.
