மயிலாடுதுறை டிஎஸ்பி சுந்தரேசனின் வாகன சர்ச்சை விவகாரத்தில் உண்மையை ஆய்வு செய்ய வேண்டும் என்று தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வலியுறுத்தி உள்ளார். Mayiladuthurai
இது தொடர்பாக ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்ட அறிக்கையில், மயிலாடுதுறை மாவட்டத்தின் மதுவிலக்கு அமலாக்க பிரிவின் துணைக் காவல் கண்காணிப்பாளராக பணியாற்றிய சுந்தரேசன் பயன்படுத்தி வந்த வாகனம் உள்நோக்கத்துடன் திரும்பப் பெறப்பட்டதாக வந்த செய்திக்கு தமிழக காவல்துறையின் சார்பாக மறுப்பு செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
தமிழக மக்களின் தமிழக அரசியல் தலைவர்களின் கடும் கண்டனங்களுக்கு பிறகு இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இவர் பின்னணியில் உள்ள உண்மையை காவல்துறை அதிகாரிகள் உரிய கவனத்துடன் ஆய்வு செய்ய வேண்டும்.

தமிழக காவல்துறையின் மதிப்பிற்கு மரியாதைக்கும் பெருமைக்குரிய காவல்துறை கண்காணிப்பாளராக பணியாற்றி வரும் சுந்தரேசன் மென்மேலும் சிறப்பாக மகிழ்ச்சியுடன் தன்னம்பிக்கையுடன் உற்சாகத்துடன், கடமை கண்ணியம், கட்டுப்பாடுடன் பணியாற்ற தமிழக காவல்துறை உரிய சூழ்நிலையை உருவாக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
சிறந்த காவல் துறை அதிகாரியாக மிகுந்த நேர்மையுடன் பணியாற்றி சட்டம் ஒழுங்கை பேணி காத்து வரும் துணை கண்காணிப்பாளர் சுந்தரேசனுக்கு தமிழக முதல்வர் வருகின்ற சுதந்திர தின விழாவில் அவருடைய சேவையை பாராட்டி தமிழக அரசின் பதக்கத்தை வழங்கி கௌரவித்து காவல்துறையின் பெருமையை மீட்டெடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.