தெலுங்கானா மாநிலத்தில் “”Marwadi go back” என்ற முழக்கம் வலுவடைந்துள்ளது.
ராஜஸ்தான், குஜராத் மாநிலங்களைச் சேர்ந்த “மார்வாடி” சமூகத்தினர் தென்னிந்திய மாநிலங்களில் முக்கிய தொழில்களை தங்கள் வசப்படுத்தி உள்ளனர். நகை அடகு கடைகள், நகை கடைகள் ஆகியவற்றில் தொடங்கி பெரும்பாலான தொழில்களில் மார்வாடிகளின் ஆதிக்கமே ஓங்கி இருக்கிறது. தமிழ்நாட்டின் சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட பல நகரங்களின் மையப்பகுதிகளில் மார்வாடிகள் பல்லாயிரக்கணக்கில் குடியேறி உள்ளனர்.
தமிழ்நாட்டில் மார்வாடிகளுக்கு எதிரான போராட்டம் மிக நீண்டகாலமாக நடைபெற்று வருகிறது. 1990களில், “மார்வாடிகளே வெளியேறு- தமிழ்நாடு வந்தேறிகளின் வேட்டைக்காடா?” என்ற முழக்கம் தமிழ்நாட்டில் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டது.
தற்போது தெலுங்கானா மாநிலத்தில் மார்வாடிகளுக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்துள்ளது. செகந்திராபாத்தில், நகை கடை உரிமையாளரான மார்வாடி ஒருவர் பார்க்கிங் பிரச்சனையில் தெலுங்கானா இளைஞரை கொடூரமாக தாக்கியதில் இருந்து இந்த பிரச்சனை வெடித்தது.
“Marwadi go back” என்ற முழக்கத்துடன் தெலுங்கானா மாநிலத்தின் பல பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்றன. உஸ்மானியா பல்கலைக் கழக மாணவர்கள் முழு அடைப்புப் போராட்டம் நடத்தினர்.
தெலுங்கானாவில் ராஜஸ்தான், குஜராத் மாநிலங்களைச் சேர்ந்த மார்வாடிகள் உள்ளிட்ட பிற மாநிலத்தவர் வெளியேற வேண்டும் என்ற முழக்கம் வலுத்து வருகிறது.