‘சுடலை ஞானம்’ என்ற வார்த்தை பத்தி யூத்துகளுக்கு அதிகம் தெரியாது. சுடலைன்னா சுடுகாடு, நாம சுடுகாடு போற வயசில நமக்கு அறிவு வந்தா, அதுக்குப் பெயர்தான் சுடலைஞானம். ஆனா, நம்ம முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு வந்திருக்கும் ‘சுடலைஞானம்’ கொஞ்சம் டெர்ரரானது.
மேட்டர் என்னான்னா, எக்னாமிக் டைம்ஸ் பத்திரிகைக்கு நேற்று அளித்த பேட்டியில், 2001ம் ஆண்டு நடந்த பாராளுமன்றத் தாக்குதலில் குற்றம் சாட்டப்பட்ட அப்சல் குருவுக்கு தூக்கு தண்டனை அளிக்கப்பட்டுவிட்டாலும், அவர்மீதான குற்றச்சாட்டுகளில் சில சந்தேகங்கள் இருக்கின்றன” என தெரிவித்துள்ளார். என்ன கொடுமைன்னா, அப்சல் குருவை தூக்கில் போட்டதே ப.சிதம்பரம் நிதியமைச்சரா இருந்த காங்கிரஸ் கூட்டணி அரசுதான். “நாங்கதான் அப்போது ஆட்சியிலிருந்தாலும், அவருக்கு தூக்கு தண்டனை அளித்தது நீதிமன்றம். அவர்மீதான குற்றச்சாட்டில் சந்தேகம் இருப்பதாக நான் தனிப்பட்டமுறையில் நம்பினாலும், நீதிமன்றத்தில் அரசு தலையிடுவது முறையல்ல என்பதால் அமைதிகாக்க வேண்டியதாகிவிட்டது” என மேலும் தெரிவித்துள்ளார். இது போதாதா! சிக்கினார் சிதம்பரம்னு, “தான் சாகும்போது,
‘அடடா… நாம செய்தது எல்லாம் பாவம்’ங்கிற எண்ணம் வந்தா, அதுக்குப் பேரு சுடலைஞானம். அடுத்தவன் செத்து மூணு வருசம் கழிச்சு வருவதற்குப் பெயர் என்னா?” என்று ஒருபக்கம், இடதுசாரி சமூகப் போராளிகள் மீன்பாடி வண்டியில சிதம்பரத்தை ஏத்தி ஒரு ரவுண்டு போயி இறக்கிவிட்டா, இன்னொருபக்கம், வலதுசாரி இந்துத்துவ ஆதரவாளர்கள் தங்களின் ‘ரதங்க’ளில் சிதம்பரத்த ஏத்தி “நீங்கதானய்யா அப்போ ஆட்சியில இருந்திங்க? அநியாயமா(!) ஒரு அப்பாவியக் கொன்னுட்டிங்களே”ன்னு இந்தி, மராத்தி, குஜராத்தியிலெல்லாம் ரவுண்டு கட்டிக்கிட்டு இருக்காங்க.
“சிதம்பரம் சார், அப்படி அந்த ஈழப் பிரச்சினையிலும் உங்களுக்குன்னு ‘தனிப்பட்ட’ முறையில் எதாவது கருத்து இருந்தா சொல்லுங்க”, அப்படின்னு நிறைய இங்கிலிஷ் தெரிந்த தமிழ் ட்விட்டர்கள் ஆன்லைனில் கேட்டுக்கிட்டு இருக்காங்க.
வாட்ஸ் அப்பில் ஜெயலலிதாவே வந்த பிறகு நம்ம ‘முதல்வர் வேட்பாளர்’ அன்புமணி சார் வரலைன்னா நல்லாவா இருக்கும், வந்துட்டாரே! அதும் எப்படி, பிரம்மாண்டமான பதவியேற்பு விழாவில் மக்களின் ஓசைகளுக்கு இடையே பதவிப் பிரமாணம் செய்துவைக்கும் கவர்னரின் ‘ஐ’ என்ற தொடக்க வாக்கியத்துக்குப் பிறகு ”அன்புமணியாகிய நான், பூரணமாக மதுவை ஒழித்து, தமிழக மக்களின் நலம் காப்பேன். தமிழகத்தின் வளர்ச்சியைக் கெடுக்கும் ஊழலை ஒழித்து நிர்வாகத்தைச் சீர்படுத்துவேன். மக்களின் அடிப்படை உரிமைகளான கல்வி மற்றும் சுகாதாரத்தின் தரத்தை உயர்த்தி, இலவச சேவையாற்றுவேன். உங்கள் ஒவ்வொருவரையும் தன்மானத்துடன் தலைநிமிர்ந்து வாழச் செய்வேன்” அப்படின்னுபோகும் அந்த, ஆடியோ துண்டு பெரிய கரகோஷத்துடன் முடிகிறது. கொஞ்சநேரத்தில் அதே வார்த்தைகளை அன்புமணி பேசும் வீடியோவும் வாட்ஸ் அப்பில் ஷேர் ஆகி வந்தது.
இதே பாலிஸியைப் பின்பற்றி வைகோ, விஜயகாந்த் எல்லாம் வாட்ஸ் அப்பில் வீடியோ ஆடியோல்லாம் வெளியிடுவாங்கன்னு தெரியுது.
“மார்க் மை வேர்ட்ஸ் மக்களே!. இந்த வருஷம் செம எண்டர்டெயின்மென்ட் காத்துக்கிட்டு இருக்கு நமக்கு”
(லாக் ஆஃப்)