ராம் இயக்கத்தில் சிவா, கிரேஸ் ஆண்டனி, மிதுன் ரியான், அஞ்சலி உள்ளிட்டோர் நடித்த பறந்து போ திரைப்படம் திரையரங்குகளில் இன்று (ஜூலை 4) வெளியாகிறது.
இதை ஒட்டி இயக்குனர் ராமின் உதவி இயக்குனராக பணியாற்றிய மாரி செல்வராஜ் அமெரிக்காவில் இருந்து வெளியிட்டுள்ள வீடியோவில்,
“ராம் சாரின் ஒவ்வொரு படம் ரிலீஸ் ஆன போதும் நான் அவருடன் தான் நான் இருப்பேன். ஆனால், தவிர்க்க முடியாத காரணங்களால் தற்போது அமெரிக்காவில் இருக்கிறேன். பறந்து போ படம் பார்த்த பலரும் படம் நன்றாக இருப்பதாக என்னை தொலைபேசியில் தொடர்புகொண்டு தெரிவித்தனர்.
இந்த கொண்டாட்டத்தை அவருடன் பகிர்ந்து கொள்ள முடியவில்லை. அமெரிக்காவில் உள்ள தமிழர்களுடன் சேர்ந்த பறந்து போ படத்தை நான் பார்க்க போகிறேன். அனைவரும் குடும்பத்துடன் சென்று பறந்து போ படத்தை பாருங்கள்.
நிச்சயமாக இந்த படம் உங்கள் அனைவரையும் பயங்கரமாக சிரிக்க வைக்கும், யோசிக்க வைக்கும், மனிதர்களை நம்ப வைக்கும். இந்த படத்தை நான் பல முறை பார்த்திருக்கிறேன். என்னுடைய வாழ்வில் மிகப்பெரிய நம்பிக்கையை எங்கள் இயக்குனர் தான். அவருடைய வார்த்தைகள் தான் என் வாழ்க்கையை மாற்றி அமைத்தது.
அந்த வார்த்தைகள் அனைத்தும் சேர்ந்தது தான் இப்படம். வாழ்க்கையின் எளிமையான விஷயங்களில் இருக்கும் பெரும் கொண்டாட்டத்தினை, ராம் சார் படம் பிடித்திருக்கிறார்” என்று தெரிவித்தார். mari selvaraj congratulates director ram