திமுக- காங்கிரஸ் கூட்டணி.. ‘டோனை’ தலைகீழாக மாற்றிய மாணிக்கம் தாகூர்.. சொன்னது என்ன?

Published On:

| By Mathi

Congress Manickam Tagore1

“திமுக- காங்கிரஸ் இடையே நீண்டகால உறவு உள்ளது; முதல்வர் ஸ்டாலின், “இந்தியா” கூட்டணியின் மிக முக்கியமான தலைவர் என்று காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் கூறியுள்ளார்.

சிவகாசியில் நேற்று செய்தியாளர்களிடம் மாணிக்கம் தாகூர் கூறியதாவது: தேமுதிக நம்ம கூட்டணிக்கு வர்றது ரொம்ப சந்தோஷமான விஷயம். எந்தக் கட்சி நம்ம கூட வந்து சேர்ந்தாலும் அது நல்ல விஷயம்தான். இதை தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் வரவேற்று இருக்காரு, நானும் வரவேற்கிறேன்.

ADVERTISEMENT

தேமுதிக வர்றதால காங்கிரஸ் வெளிய போயிடும்னு சொல்றதெல்லாம் சும்மா பொய். எங்களுக்கும் திமுக-வுக்கும் இருக்குறது ரொம்ப காலத்து உறவு. வேணுகோபாலும் கிரிஷ் சோடங்கரும் சொன்ன மாதிரி, தொகுதிப் பங்கீடு பத்தி பேசுறதுக்காக ஒரு குழு அமைச்சிருக்கோம். அந்தக் குழு பேசுறதுக்காக நாங்க காத்துக்கிட்டு இருக்கோம்.

மணிசங்கர் ஐயர் பத்தி கேக்குறீங்க, அவர் இப்போ காங்கிரஸ்லேயே இல்லை. அவருக்கு வயசாயிடுச்சு, அதனால அவர் சொல்றதெல்லாம் பெருசா எடுத்துக்காதீங்க. அவருக்கு லோக்சபா சீட் கேட்டும் கிடைக்கல, ராஜ்யசபா சீட் கேட்டும் காங்கிரஸ் கொடுக்கல. அந்த வருத்தத்துல இப்போ கேரளால போய் பினராயி விஜயனை முதலமைச்சர் ஆக்கணும்னு பேசிட்டு இருக்காரு. அவர் அந்தந்த ஊர் கிளைமேட்டுக்கு ஏத்த மாதிரி மாத்தி மாத்தி பேசுவாரு.

ADVERTISEMENT

இந்தியா கூட்டணிய பத்தி, இந்தியா கூட்டணியில இருக்குறவங்க பேசட்டும், கூட்டணியிலேயே இல்லாதவங்க எல்லாம் ஏன் இதைப் பத்தி பேசுறாங்கன்னு தெரியல. சீமான் என்ன இந்தியா கூட்டணியிலயா இருக்காரு? இல்லையே. கூட்டணியில இருக்குற தலைவர்கள் எல்லாம் உட்கார்ந்து பேசிப்பாங்க. அண்ணன் ஸ்டாலின் அவர்கள் இந்த கூட்டணியில ரொம்ப முக்கியமான ஒருத்தர்.

சீமான் எதுக்கு எல்லாத்துக்கும் கமெண்ட் அடிச்சிட்டு இருக்காருன்னு தெரியல. அவர் ‘கேட்டுக்கு’ வெளிய நின்னு வேடிக்கை பாக்குறவரு. அவர் முதல்ல அவரோட ‘நாம் தமிழர்’ கட்சியை எப்படிக் காப்பாத்துறதுன்னு பாக்கட்டும். ஏன்னா அந்தப் பார்ட்டி இப்போ சுருங்கிக்கிட்டு வருதுன்னு தகவல் வருது. போன தடவை 8 சதவீதம் ஓட்டு வாங்குனாரு, இந்தத் தடவை எவ்வளவு வாங்குறாருன்னு பாப்போம். இவ்வாறு மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலினிடம் கடந்த செவ்வாய்க்கிழமையன்று சோனியா காந்தியும் புதன்கிழமையன்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவும் தொடர்பு கொண்டு பேசினர்; இதனையடுத்து திமுக கூட்டணியில் காங்கிரஸ் நீடிப்பது உறுதியானது; இதனால் திமுக கூட்டணியில் தேமுதிகவும் இணைந்தது என நேற்று நமது மின்னம்பலம் டிஜிட்டல் திண்ணையில் பதிவு செய்திருந்தோம். காங்கிரஸில் கலகக் குரல் எழுப்பிய மாணிக்கம் தாகூரும் கூட்டணிக்கு எதிரான தமது நிலைப்பாட்டை தற்போது மாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share