திண்டுக்கல் லியோனியின் மகன் லியோ சிவக்குமார் நடிக்க, அறிமுக இயக்குநர் எஸ். விஜய் சுகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மாண்புமிகு பறை’ திரைப்படம், உலகின் தலைசிறந்த திரைப்பட விழாக்களில் ஒன்றான கேன்ஸ் திரைப்பட விழா (Cannes Film Festival)வில் பங்கேற்று, ஜூரி உறுப்பினர்களின் பாராட்டைப் பெற்றது.
மீண்டும் அதே கேன்ஸ்–ல் நடைபெறும் World Film Festival–இல் கலந்து கொண்டு, இம்மாதம் நடைபெற்ற Official Selection–இல் Best Social Justice Film (சிறந்த சமூக நீதிக்கான திரைப்படம்) என்ற பிரிவில் தேர்வாகியுள்ளது. .
அத்துடன், இத்தாலியில் நடைபெற்ற Othismos Film Festival–இல் Culture, Heritage and Local Identity (கலாச்சார பாரம்பரியம் மற்றும் உள்ளூர் அடையாளம்) என்ற பிரிவில் விருதைப் பெற்றுள்ளது.
“இது பறைக்கு இன்னொரு பிறப்பு; முடிவல்ல, ஆரம்பம்…” பறை நம் வாழ்க்கையின் பல்வேறு தருணங்களிலும், கலாச்சாரங்களிலும் ஒலித்துவருகிறது. ஆனால், இந்த முறை கதை ஐரோப்பாவிலிருந்து — குறிப்பாக பிரான்ஸிலிருந்து — தொடங்குகிறது. பறை எப்படி நம் நாட்டின் எல்லைகளைத் தாண்டி உலகம் முழுவதும் ஒரு வலிமையான குரலாக பரவியது என்பதை படம் வலியுறுத்துகிறது என்கிறது படக் குழு .
திரைக்கு வந்து மக்கள் மனதையும் வெல்லட்டும் !
- ராஜ திருமகன்
