அஜித்குமாரை தாக்கும் வீடியோ எடுத்த ‘நேரடி சாட்சி’- ஆயுதமேந்திய போலீஸ் பாதுகாப்பு கோரி மனு!

Published On:

| By Minnambalam Desk

Ajithkumar Case

மடப்புரம் அஜித்குமாரை போலீசார் தாக்கும் வீடியோவை எடுத்த ‘நேரடி சாட்சியான’ சக்தீஸ்வரன் தமக்கு ஆயுதமேந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்க கோரி மனு அளித்துள்ளார். Ajithkumar Police

அஜித்குமாரை போலீசார் தாக்கும் வீடியோ காட்சிகளை மடப்புரம் கிராமத்தைச் சேர்ந்த சக்தீஸ்வரன் பதிவு செய்திருந்தார். அஜித்குமார் மரண வழக்கில் மிக முக்கியமான சாட்சியமாக இந்த வீடியோ இடம் பெற்றுள்ளது.

அஜித்குமார் மரண வழக்கின் நேரடி சாட்சியான சக்தீஸ்வரன், டிஜிபிக்கு ஒரு புகார் மனு அனுப்பி உள்ளார். அதில், மடப்புரம் அஜித்குமார் கொலை வழக்கில நான் நேரடி சாட்சி. சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையின் உத்தரவுப்படி நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியமளித்தேன். இதனைத் தொடர்ந்து எனக்கு தேவைப்பட்டால் போதுமான பாதுகாப்பு வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த வழக்கில் முதல் குற்றவாளியான தனிப்படை காவலர் ராஜா, பல்வேறு குற்றப் பின்னணி உள்ள ரவுடிகளுடன் தொடர்புடையவர். கடந்த ஜூலை 28-ந் தேதி அவரை சந்தித்த போதே என்னை கடுமையாக மிரட்டினார். இதனால் நீதிமன்ற உத்தரவுப்படி எனக்கு ஆயுதமேந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share