நான் துரோகி என்று என் மீது கொடும்பலியை சுமத்தியுள்ளனர் என்று மல்லை சத்யா கூறியுள்ளார். Mallai Sathya interview
கடந்த ஜூலை 3 ஆம் தேதி மின்னம்பலத்தில், ’திமுகவோடு தொடர்பு… எனக்கு எதிராக லாபி… வெளியே போங்க… மல்லை சத்யாவை எச்சரித்த வைகோ’ என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.
அதில் ஜூன் 29ஆம் தேதி மதிமுக நிர்வாக குழு கூட்டத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யாவை, பொதுச் செயலாளர் வைகோ நேருக்கு நேராக கடுமையாக விமர்சித்து பேசியதை பதிவு செய்திருந்தோம்.
குறிப்பாக கட்சிக்கு எதிராக மல்லை சத்யா செயல்படுகிறார் என்றும் அவர் துரோகி என்றும் வைகோ கூறியிருந்தார்.
இந்தநிலையில் மல்லை சத்யா நமது மின்னம்பலம் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்தார்.
அவர்கள்தான் என்னை தளபதி, சேனாதிபதி என்று சொன்னார்கள். இப்போது துரோகி என்ற கொடும்பலியை சுமத்தியிருக்கிறார்கள் என்று வேதனைப்பட்ட மல்லை சத்யா, என்னை புறக்கணிக்க வேண்டும், நிராகரிக்க வேண்டும் என்று முடிவெடுத்த பின்னர்தான் அதை நோக்கிய நகர்வுகளை முன்னெடுத்தனர்” என்றார்.
உங்களை நிராகரிக்க என்ன காரணம்? என்ற கேள்விக்கு, “எவ்வளவோ பேர் கட்சியை விட்டு போனாலும், நான் போகாமல் இருந்தேன். ஆனால் 4 ஆண்டுகளாக திட்டமிட்டு அவமதித்து, அவமானப்படுத்தியதால் தான் நான் என்னுடைய சூழ்நிலையை விளக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டேன்.
நேற்று முன்தினம் கூட செய்தியாளர்களைச் சந்தித்த துரை வைகோ என்னை அவமதித்து பேசினார். மதிமுக மகளிர் அணி எதிர்த்த போதும், அவர் சொல்லியதால் தான் என் மனைவிக்கு மாமல்லபுரம் நகராட்சி மன்ற உறுப்பினர் சீட் கொடுக்கப்பட்டதாக துரை வைகோ சொல்கிறார். இது எவ்வளவு பெரிய பொய். அப்படியென்றால் அவருடைய வக்கிர புத்தி என்னவென்று தெரிகிறது.
இவருக்கும் உள்ளாட்சி மன்றத் தேர்தலுக்கும் சம்பந்தமே இல்லை” என கூறினார்.
மேலும் பல்வேறு விஷயங்களை மல்லை சத்யா பகிர்ந்துகொண்டார்.
முழு பேட்டியையும் காண இங்கே க்ளிக் செய்யவும்.
பேட்டி – கலைச்செல்வி சரவணன் – இணை ஆசிரியர் Mallai Sathya interview