மதுரையில் தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாடு இன்று (ஆகஸ்ட் 21) மாலை 3 மணிக்கு இசை நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இந்த இசை நிகழ்ச்சியை மேடையின் பின்புறம் உள்ள கேரவனில் இருந்து ரசித்தார் நடிகர் விஜய்.
மதுரையில் நடிகர் விஜய்யின் தவெகவின் 2-வது மாநாடு நடைபெற்று வருகிறது. இம்மாநாட்டில் பங்கேற்க தமிழ்நாடு முழுவதும் இருந்தும் லட்சக்கணக்கான தொண்டர்கள் வருகை தந்துள்ளனர்.

மதுரை மாநகரில் வெயில் கொளுத்தும் நிலையில் பந்தல் போடாததால் வெயிலையும் பொருட்படுத்தாமல் தொண்டர்கள் குவிந்துள்ளனர். இந்த மாநாடு மாலை 3 மணிக்கு தொடங்கியது.
இம்மாநாட்டின் மேடையில் தவெக தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் ஒருசேர அமரவைக்கப்பட்டனர். நடிகர் விஜய்யின் பெற்றோரும் மேடையில் அமரவைக்கப்பட்டனர். முதலில் பாரம்பரிய இசை நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியை மேடையின் பின்புறம் நிறுத்தப்பட்டுள்ள கேரவனில் இருந்து தவெக தலைவர் நடிகர் விஜய் ரசித்தார்.
இசை நிகழ்ச்சி முடிந்த பின்னர் மேடைக்கு வரும் விஜய் ரேம்ப் வாக் மூலம் தொண்டர்களை சந்திக்கிறார். பின்னர் மாநாட்டில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு இறுதியாக விஜய் சிறப்புரை நிகழ்த்துவார்.