பயணிகள் கனிவான கவனத்துக்கு.. மதுரை- குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் செப்.10 முதல் செ.ப் 13 வரை மாற்றம்

Published On:

| By easwari minnambalam

Guruvayur train partially cancelled

திருவனந்தபுரம் கோட்டத்தில் பராமரிப்பு பணி நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக செங்கோட்டை வழியாக தினமும் இயக்கப்படும் மதுரை – குருவாயூர் – மதுரை ரயில்கள் செப்டம்பர் 10, 11. 12, 13 ஆகிய நாட்களில் பகுதி ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

மதுரை – குருவாயூர் ரயில் (எண் : 16327) வரும் செப்., 10, 12 தேதிகளில் கொல்லம் வரை மட்டும் இயக்கப்படும். மறுமார்க்கத்தில் குருவாயூர் – மதுரை ரயில் (எண் : 16328) வரும் செப்., 11, 13 தேதிகளில் கொல்லத்தில் இருந்து மதியம் 12:10 மணிக்கு புறப்படும்.

ADVERTISEMENT

இரு ரயில்களும் கொல்லம் – குருவாயூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகின்றன. பயணிகள் இதற்கு ஏற்ற வகையில் முன்னேற்பாடுகளை செய்து கொள்ளலாம்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share