ADVERTISEMENT

மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி ராஜினாமா

Published On:

| By Kavi

மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

மதுரை மாநகராட்சியில் சொத்து வரி மதிப்பீட்டில் ரூ150 கோடி முறைகேடு நடந்துள்ள விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் 10க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ADVERTISEMENT

 இவர்களில் மேயர் இந்திராணியின் கணவர் பொன் வசந்த்தும் கைது செய்யப்பட்டார். தற்போது அவர் ஜாமினில் உள்ளார். இந்த நிலையில் மதுரை மேயர் இந்திராணி பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என திமுக தலைமை உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வந்தன.

இந்தசூழலில் இன்று (அக்டோபர் 15) தனது மேயர் பதவியை ராஜினாமா செய்து அந்த கடிதத்தை மதுரை மாநகராட்சி ஆணையர் சித்ரா விஜயனிடம் வழங்கியுள்ளார்.

ADVERTISEMENT

அதில் குடும்ப சூழல் காரணமாக ராஜினாமா செய்வதாக கூறியுள்ளார்.

இந்த ராஜினாமா கடிதத்தை ஏற்பது தொடர்பாக துணை மேயர் தலைமையில் அக்டோபர் 17ஆம் தேதி அவசர ஆலோசனை கூட்டம் நடைபெறும் என தகவல்கள் வருகின்றன.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share