சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ’மதராஸி’ திரைப்படம் வெளியான தமிழ்நாட்டில் மட்டும் முதல் நாளில் ரூ. 12.8 கோடி வசூல் செய்துள்ளது.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ருக்மணி வசந்த், வித்யூத் ஜம்வால் உள்ளிட்டோரின் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘மதராஸி’.
அமரன் படத்தின் பிரம்மாண்ட வெற்றியால் சிவகார்த்திகேயன் படம் என பார்க்கப்பட்டாலும், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் கடைசியாக தமிழில் இயக்கிய ‘தர்பார்’, பாலிவுட்டில் இயக்கிய ‘சிக்கந்தர்’ ஆகிய படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறாததால், மதராஸி படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் சற்று குறைவாகவே இருந்தது.
எனினும் படம் வெளியாகி அதிரடி ஆக்ஷன் படமாக ரசிகர்களை கவர்ந்திருக்கிறது ‘மதராஸி’.
இந்த நிலையில் மதராஸி திரைப்படம் முதல் நாளில் தமிழ்நாட்டி மட்டும் ரூ. 12.8 கோடி வசூல் செய்துள்ளதாக படத்தை தயாரித்த ஸ்ரீ லட்சுமி மூவீஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
உலகம் முழுவதும் 20 முதல் 24 கோடி வரை வசூலை குவித்திருக்கும் என பிரபல சினிமா வர்த்தக இணையதளமான ‘சாக்னில்க்’ தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த தீபாவளிக்கு வெளியான சிவகார்த்திகேயனின் ’அமரன்’ திரைப்படம், முதல் நாளிலேயே உலகம் முழுவதும் ரூ.42.3 கோடி வசூலை குவித்தது குறிப்பிடத்தக்கது.