கோவை மாதம்பட்டி பகுதியை சேர்ந்தவர் ரங்கராஜ். இவர் தந்தை தங்கவேல் கோவை பகுதியில் பிரபல கேட்ரிங் நிறுவனத்தை நடத்தி வந்தார். இந்நிலையில் ரங்கராஜூம் தன் தந்தையின் கேட்டரிங் நிறுவனத்தை தொடர்ந்து நடத்தி வருகிறார். திரைப்பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட விஐபி-களின் இல்ல விழாக்களில் இவர் சமையல் செய்து பிரபலமடைந்தார்.
இதற்கிடையில் இவர் மெகந்தி சர்க்கஸ் திரைப்படம் மூலம் திரையுலகில் அடியெடுத்து வைத்தார். மேலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராகவும் இருந்து வருகிறார்.
மாதம்பட்டி ரங்கராஜ், ஸ்ருதி பெண்ணை திருமணம் செய்திருந்த நிலையில் இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் இருக்கின்றனர். இதற்கிடையில் கடந்த மாதம் மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாக செய்திகள் பரவ தொடங்கியது. திரையுலக பிரபலங்களுக்கு ஆடை வடிவமைப்பாளராக இருந்து வரும் ஜாய் கிரிஸில்டா தனது இன்ஸ்டா பக்கத்தில் சில புகைப்படத்தை பகிர்ந்திருந்தார்.
கோயிலில் மண காேலத்தில் மாதம்பட்டி ரங்கராஜ், தன் நெற்றியில் குங்குமம் வைத்து விடுவது போன்ற புகைப்படத்தை ஜாய் பதிவிட்டருக்கிறார். கூடவே கேப்ஷனில், “மிஸ்டர் அண்ட் மிஸ்ஸர்ஸ் ரங்கராஜ்” என்று குறிப்பிட்டிருந்தார். ஜாய் கிரிஸில்டா, தான் கர்ப்பமாக இருப்பதாகவும் தனது இன்ஸ்டாகிராம் பயோவில் குறிப்பிட்டிருக்கிறார்.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்நிலையில் முதல் மனைவி உடன் விவாகரத்து செய்யாமல் 2 ஆம் திருமணம் செய்ததாக விமர்சனங்கள் எழுந்தன.
இந்த நிலையில் கோவை கொடிசியா அரங்கில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சியில் முதல் மனைவி ஸ்ருதி உடன் ரங்காஜ் கலந்து கொண்டு இருந்தார். தற்போது இதுவும் நெட்டிசன்கள் மத்தியில் பேசு பொருளாகி உள்ளது. சமூக வலைத்தள விமர்சனங்களுக்கு ரங்கராஜ் முற்றுப்புள்ளி வைத்ததாகவும் கூறப்படுகிறது.