ADVERTISEMENT

நான் மட்டுமல்ல… 10 பெண்கள்… : மாதம்பட்டி ரங்கராஜ் மீது ஜாய் கிரிஸில்டா பகீர் புகார்!

Published On:

| By Pandeeswari Gurusamy

Madhampatty Rangaraj accused of cheating 10 women

பிரபல சமையல் கலைஞரும், நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை போல் 10 பெண்களை ஏமாற்றி உள்ளதாக பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா பகீர் தகவலை வெளியிட்டுள்ளார்.

மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை ஏமாற்றி திருமணம் செய்து விட்டு கர்ப்பமாக்கிவிட்டு, தற்போது சேர்ந்து வாழ மறுப்பதாக ஜாய் கிரிஸில்டா தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களையும் வீடியோக்களையும் பகிர்ந்து வருகிறார்.

ADVERTISEMENT

இதுகுறித்து ஜாய் கிரிஸில்டா காவல் ஆணையர் அலுவலகத்திலும் புகார் அளித்தும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என அவர் குற்றம்சாட்டி உள்ளர்.

இந்நிலையில் மக்களவை உறுப்பினரும், வழக்கறிஞருமான சுதாவுடன் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள தேசிய மகளிர் ஆணையத்தில் இன்று (அக்டோபர் 8) ஜாய் கிரிஸில்டா புகார் ஒன்றை அளித்துள்ளார்.

ADVERTISEMENT

அதில், “மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை திருமணம் செய்து ஏமாற்றி உள்ளார். மேலும் தன்னைப்போல் 10க்கும் மேற்பட்ட பெண்களை ரங்கராஜ் ஏமாற்றி உள்ளார்” என்று குற்றம்சாட்டி உள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய வழக்கறிஞர் சுதா எம்.பி,”மாதம்பட்டி ரங்கராஜ் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. ஜாய் கிரிஸில்டாவை ஏமாற்றியது போல தங்களையும் ஏமாற்றியதாக 10 க்கும் மேற்பட்ட பெண்கள் எங்களிடம் தெரிவித்தனர். அந்த ஆவணங்களை சேகரித்து நீதிமன்றத்தில் கொடுக்க உள்ளோம்.” என்று தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஜாய் கிரிஸில்டா, “அவர்கள் இந்த குழந்தையை என்ன வேண்டுமானாலும் செய்யலாம். அதனால் எனக்கும் எனது வயிற்றில் இருக்கும் குழந்தைக்கும் ஏதாவது நடந்தால் அதற்கு மாதம்பட்டி ரங்கராஜ்தான் பொறுப்பு” என்று தெரிவித்தார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share