விஜய் பட காஸ்டியூம் டிசைனருடன் மாதம்பட்டி ரங்கராஜ் 2வது திருமணம்… வெடிக்கும் சர்ச்சை!

Published On:

| By christopher

madhampatti rangaraj 2nd marriage with joycrizilda

குக் வித் கோமாளி புகழ் மாதம்பட்டி ரங்கராஜுக்கு ஏற்கெனவே திருமணமாகி 2 குழந்தைகள் உள்ள நிலையில், தற்போது 2வது திருமணம் நடைபெற்றுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர், தயாரிப்பாளர் என்ற அடையாளத்துடன் தமிழ்நாட்டில் தற்போதைக்கு மிக பிரபலமான சமையற்கலை வல்லுநராக வலம் வருகிறார் மாதம்பட்டி ரங்கராஜ்.

ADVERTISEMENT
கோவையைச் சேர்ந்த இவர் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான மெஹந்தி சர்க்கஸ் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அதன்பின்னர் அடுத்த ஆண்டே கீர்த்தி சுரேஷ் நடித்த பென் குயின் படத்திலும் நடித்தார்.
அதன்பின்னர் சினிமாவில் இருந்து விலகிய அவர் திரையுலக, அரசியல் பிரபலங்களின் கல்யாண விருந்து, விருது விழா உள்ளிட்ட பிரம்மாண்ட நிகழ்ச்சி ஏற்பட்டாளராகவும், தலைமை சமையல் கலைஞராகவும் பணியாற்றி வருகிறார். தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராகவும் செயல்பட்டு வருகிறார்.
இவருக்கு வழக்கறிஞரான ஸ்ருதி என்பவருடன் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
எனினும் கடந்த சில மாதங்களாக மாதம்பட்டி ரங்கராஜ் பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஷில்டாவுடன் லிவ்-இன் உறவில் இருந்து வந்தார். ஜாய் கிரிஷில்டாவும் ஏற்கெனவே திருமணமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் ஜில்லா, றெக்க, வேலைக்காரன், ரிச்சி உள்ளிட்ட பல படங்களில் பணியாற்றியுள்ளார்.
கடந்த காதலர் தினத்தனறு ஜாய் கிரிஸில்டா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ‘காதலர் தினத்தை மாதம்பட்டி ரங்கராஜுடன் கொண்டாடினேன்’ என குறிப்பிட்டு பதிவு ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.
தொடர்ந்து ஜாய் பதிவுகள் கவனம் பெற்றுவந்த நிலையில், விரைவில் இருவரும் திருமணம் செய்யப் போவதாக தகவல் வெளியானது. ஆனால் இருவரும் அதுகுறித்து எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடாமல் இருந்தனர்.
இந்த நிலையில், ஜாய் கிரிஸில்டாவை மாதம்பட்டி ரங்கராஜ் தற்போது 2வது திருமணம் செய்துள்ளார். கோவிலில் எளிய முறையில் நடைபெற்ற இவர்களது திருமணத்தில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டுமே பங்கேற்றுள்ளனர்.
இருவரும் ஏற்கெனவே திருமணமான நிலையில், அவர்களின் விவகாரத்து குறித்து எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளிவராத நிலையில், அவர்களின் 2வது திருமணம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தனது திருமண புகைப்படத்தை பகிர்ந்த கையோடு, கிரிஷில்டாவின் மற்றொரு அறிவிப்பு பலரையும் உற்றுநோக்க வைத்துள்ளது. ஏற்கெனவே லிவ்-இன் உறவில் இருவரும் வாழ்ந்து வந்த நிலையில், தற்போது தான் 6 மாத கர்ப்பமாக இருப்பதாகவும் பதிவிட்டுள்ளது தமிழ் திரையுலகில் மத்தியில் கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share