‘மாமன்’ 50-வது நாள்… சூரி நெகிழ்ச்சி பதிவு!

Published On:

| By Selvam

maaman movie 50th days actor soori

பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் சூரி, ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, ஸ்வாசிகா, பால சரவணன் உள்ளிட்டோர் நடித்த மாமன் திரைப்படம் கடந்த மே 16-ஆம் தேதி வெளியானது.

இப்படத்தின் 50-வது நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, நடிகர் சூரி வெளியிட்ட எக்ஸ் வலைதள பதிவில், maaman movie 50th days actor soori

“இன்று, மாமன் திரைப்படம் தனது 50-வது நாளை பெருமையுடன் கொண்டாடுகிறது. இந்த சிறப்பான தருணத்தில், மாமன் திரைப்படத்தின் உணர்வுகளை உணர்ந்து இதயபூர்வமாக ஆரத்தழுவிய நம் தமிழ் குடும்பங்களுக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த அழகிய பயணத்தில், என் மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைத்த என் அருமையான சக நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் என்றென்றும் நன்றி கூற கடமைப்பட்டிருக்கிறேன்.

மேலும், இந்த வெற்றியை பரவலாக்கி, உலகிற்கு எடுத்துச் சென்ற ஊடக நண்பர்களுக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

என் அன்பு ரசிகர்களின், தொடர்ந்த ஆதரவு எப்போதும் எனக்கு உந்து சக்தியாக இருக்கும். என் அடுத்தடுத்த படைப்புகளிலும் உங்களின் அன்பிற்கு பாத்திரமாக ஆத்மார்த்தமாக உழைப்பேன். உங்கள் அனைவருக்கும் என் உளமார்ந்த நன்றி” என்று தெரிவித்துள்ளார். maaman movie 50th days actor soori

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share