உங்கள் கனவை சொல்லுங்க திட்டத்தின் நிறைவாக கனவுகள் மெய்ப்படும் நிகழ்ச்சி சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் இன்று (மார்ச் 6) நடைபெற்று வருகிறது. இதில் முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.
தமிழ்நாடு முழுவதும் ஒரு கோடியே 80 லட்சம் குடும்பங்களை நேரடியாகச் சந்தித்து, அவர்களின் கனவுகள், தேவைகள், எதிர்பார்ப்புகளைத் தெரிந்துகொண்டு, அதனடிப்படையில் தமிழ்நாட்டின் அடுத்த கட்ட வளர்ச்சிக்கான தொலைநோக்கு பார்வை குறித்த நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ‘தமிழ்நாடு 2030’ என்ற தலைப்பில் 14 முக்கியத் துறைகளில் முக்கிய இலக்குகளை அவர் வெளியிட்டுள்ளார்.
வீட்டுவசதி
“நம் கனவு – நம் வீடு – நம் தமிழ்நாடு என்ற நோக்கில், 2030க்குள் கிராமப்புறங்களில் கலைஞர் கனவு வீடு திட்டத்தின் கீழ் 5 லட்சம் வீடுகள், நகர்ப்புறங்களில் 2 லட்சம் வீடுகள்
கட்டப்பட்டு தேவையுள்ள குடும்பங்களுக்கு வழங்கப்படும்.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு
- “நலமுடன் தமிழ்நாடு 2030”
அனைவருக்கும் போதிய மருத்துவ காப்பீடு வழங்க நடவடிக்கை. - நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், புற்றுநோய் போன்ற நோய்களை ஆரம்பத்திலேயே கண்டறிய சிறப்பு முகாம்கள்.
- தாய் மற்றும் சேய் நலத்தில் IMR, MMR குறைப்பில் இந்தியாவில் முதலிடம் பெற நடவடிக்கை.
- ஒவ்வொரு மாவட்டத்திலும் மனநல ஆலோசனை மையங்கள் அமைக்கப்படும்.
வேளாண்மை மற்றும் உழவர் நலன்
- நிகர சாகுபடி பரப்பளவு 50 லட்சம் ஹெக்டேராக உயர்த்தப்படும்.
- 41 லட்சம் விவசாயிகளுக்கு மண்வள அட்டைகள் வழங்கப்படும்.
- இயற்கை விவசாயம் 17,000 ஹெக்டேராகவும், உயிர் வேளாண்மை 1 லட்சம் ஹெக்கேடராகவும் விரிவுபடுத்தப்படும்.
- நுண்ணீர் பாசனம் 21 லட்சம் ஹெக்டேராக அதிகரிக்கப்படும்.
- மேற்கு மற்றும் கிழக்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் 1000 மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் உருவாக்கப்படும்.
- உணவு உற்பத்தி 125 லட்சம் மெட்ரிக் டன்னாக உயர்த்தப்படும். 1000 மதிப்பு கூட்டல் மையங்கள் அமைக்கப்படும்.
பள்ளிக் கல்வி
- “இடைநிறுத்தமில்லா கல்வி” இலக்குடன்
- 2030க்குள் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பள்ளிகளில் 100% ஸ்மார்ட் வகுப்பறைகள்.
- 1000 மாடல் பள்ளிகள் உருவாக்கம்.
- 300க்கும் மேற்பட்ட நூலகங்கள் மற்றும் மாணவர்களின் உடல்-மனம் வளர்ச்சிக்கான வசதிகள் மேம்படுத்தப்படும்.
உயர்கல்வி
- 2030க்குள் உயர்கல்வி சேர்க்கை விகிதம் 90% எட்டும் வகையில் நிறுவன கட்டமைப்பு உயர்த்தப்படும்.
- மைய ஆய்வகங்கள் மற்றும் Centre of Excellence அமைக்கப்படும்.
- அனைத்து கல்வி நிறுவனங்களிலும் செயற்கை நுண்ணறிவு (AI) ஆய்வகங்கள் நிறுவப்படும்.
- வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் தமிழ்நாட்டில் செயல்பட வழிவகை செய்யப்படும்.
பிற்படுத்தப்பட்டோர் நலன்
- திறன் மேம்பாட்டு பயிற்சிகள் மூலம் பொருளாதார முன்னேற்றம்.
- மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையின மாணவர்களுக்கு சிறப்பு கல்வித் திட்டங்கள்.
- சமூகநலக் கல்லூரி விடுதிகள் அமைக்க நடவடிக்கை.
- வணிகம் மற்றும் தொழில் தொடங்க கடன் வசதி கிடைக்க நடவடிக்கை
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலன்
- வீடு மனையற்ற குடும்பங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்குதல்.
- மாணவர்களின் பள்ளி இடைநிறுத்தத்தைத் தடுக்க திட்டங்கள்.
- அம்பேத்கர் பெயரில் செயல்படும் அயலக உயர்கல்வி திட்டம் விரிவுபடுத்தப்படும்.
ஊரக வளர்ச்சி
- முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் முன்வைத்த “கிராமங்களில் நகர்ப்புற வசதிகள்” என்ற கருத்தின் அடிப்படையில் கிராமங்கள் மேம்படுத்தப்படும்.
- “உத்தமர் காந்தி மாதிரி கிராமங்கள் திட்டம்” தொடங்கப்பட்டு முதற்கட்டமாக 10 ஊராட்சிகளில் செயல்படுத்தப்படும்
தொழில் துறை
- தமிழ்நாடு இந்தியாவின் பொருளாதார வல்லரசாக ரூ.18 லட்சம் கோடி முதலீடு இலக்கு.
- 50 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கம்.
- தமிழ்நாட்டின் ஏற்றுமதி 120 பில்லியன் டாலராக உயர்த்த நடவடிக்கை.
- ஐடி துறையில் 2 லட்சம் புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்.
- மாவட்டம் தோறும் நவீன தொழில் பூங்கா அமைக்கப்படும்.
கால்நடை, பால்வளம் மற்றும் மீன்வளம்
- கடல் கூண்டு மீன் வளர்ப்பை ஊக்குவித்து உற்பத்தி 400 டன்னாக உயர்த்தப்படும். கடல் பாசி சாகுபடி 30,000 டன்னாக உயர்த்துவோம்.
- உள்நாட்டு மீன் உற்பத்தி உயர்வு.
- 2030க்குள் பால் உற்பத்தி 3 கோடி லிட்டரிலிருந்து 4.5 கோடி லிட்டராக அதிகரிக்க நடவடிக்கை.
நகராட்சி நிர்வாகம்
- நகரங்களில் Complete Streets திட்டம்.
- 2030க்குள் நகரங்களில் 20% பசுமை பகுதிகள் உருவாக்கம்.
- கழிவுநீர் சுத்திகரிப்பு மற்றும் மறுசுழற்சி திட்டங்கள்.
MSME துறை
- தற்போது உள்ள 40.5 லட்சம் MSME நிறுவனங்கள் மேலும் வலுப்படுத்தப்படும்.
- 2030ல் MSME துறை சார்பாக 5 சிறப்பு தொழில் குழுமங்கள் அமைக்கப்படும்.
- உணவு பதப்படுத்துதல் மற்றும் வேளாண்மை சார்ந்த தொழில்களுக்கு முன்னுரிமை.
நெடுஞ்சாலைத் துறை
- AI மற்றும் Intelligent Transport System மூலம் சாலை பாதுகாப்பு மேம்பாடு.
- கோவில் நகரங்கள் மற்றும் சுற்றுலாத் தலங்களுக்கு செல்லும் சாலைகள் மேம்படுத்தப்படும்.
கைத்தறி மற்றும் ஜவுளித் துறை
- நெசவாளர்களுக்கு புதிய தொழில்நுட்பங்கள்.
- GI பதிவு பெற்ற கைத்தறி தயாரிப்புகள் தேசிய மற்றும் சர்வதேச கண்காட்சிகளில் காட்சிப்படுத்தப்படும்.
இந்தத் திட்டங்கள் மூலம் 2030க்குள் தமிழ்நாட்டை வளர்ச்சி பெற்ற மாநிலமாக மாற்றும் நோக்கம் கொண்டதாக முதலமைச்சர் தெரிவித்தார்.
