ADVERTISEMENT

பாஜகவிற்கு தமிழக மக்கள் பாடம் புகட்டுவார்கள் – மு.க.ஸ்டாலின்

Published On:

| By Pandeeswari Gurusamy

mkstalin

ஒன்றிய பட்ஜெட்டில் பெரும் ஏமாற்றம் மட்டும்தான் இருக்கிறது. ஒன்றிய பாஜக அரசுக்கு தமிழ்நாட்டு மக்கள் பாடம் புகட்டுவார்கள் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் சென்னை கொளத்தூர் தொகுதியில் அமைக்கப்பட்டுள்ள இரத்த சுத்திகரிப்பு நிலையத்தை இன்று தொடங்கி வைத்தார். அதே தொகுதியில் கட்டப்பட்டுள்ள மறுவாழ்வு மையத்தையும், நியாயவிலைக் கடைகளையும் தொடங்கி வைத்தார்.

ADVERTISEMENT

இதைத் தொடர்ந்து அங்கிருந்த செய்தியாளர்கள், மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்காதது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு “ஒன்றிய பட்ஜெட்டில் பெரும் ஏமாற்றம் மட்டும்தான் இருக்கிறது. வேறு எந்த மாற்றமும் இல்லை. ஒன்றிய அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு எந்தத் திட்டமும், நிதியும் அறிவிக்கப்படவில்லை. மக்கள் வரக்கூடிய சட்டமன்றத் தேர்தலில் ஒன்றிய பாஜக அரசுக்கு தமிழ்நாட்டு மக்கள் பாடம் புகட்டுவார்கள்” என்றார்.

திமுக கூட்டணி பேச்சுவார்த்தை குறித்த கேள்விக்கு,“விரைவில் கூட்டணி பேச்சுவார்த்தையைத் தொடங்குவோம். சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக்கு விரைவில் குழு அமைக்கப்படும். காங்கிரஸ், விசிக, மதிமுக, இடதுசாரிகள் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தும் வகையில் விரைவில் குழு அமைக்கப்படும்” என்று தெரிவித்தார்.

ADVERTISEMENT

“புதிய எதிரிக்கு என்ன சொல்கிறீர்கள்?” என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு,
“நான் யாரையும் எதிரியாகப் பார்ப்பதில்லை. விமர்சிப்பவர்களையும் நண்பர்களாகவே பார்க்கிறேன்” என்று தெரிவித்தார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share