பாண்டிய நாட்டுக் குறும்படப் போட்டி !

Published On:

| By Minnambalam Desk

“LUMIERE 2025 – Pandiya’s Special” குறும்பட போட்டி டிசம்பர் 18, 2025 அன்று மதுரை Lady Doak College-ல் நடைபெற உள்ளது.

இந்தப் போட்டியில் தேர்ந்தெடுக்கப்படும் குறும்படத்தை ஒரு முழுநீள திரைப்படமாக மாற்றவும் செய்வார்களாம்.

ADVERTISEMENT

திறமையான குறும்பட இயக்குநர்கள், எழுத்தாளர்கள், மற்றும் கலைஞர்களுக்கு தங்கள் படைப்பாற்றலை வெளிப்படுத்தும் அரங்கமாக இது அமையும்.

பதிவு செய்யும் கடைசி தேதி: 08.12.2025
பங்கேற்பாளர்கள் QR குறியீட்டின் மூலம் அல்லது கீழே குறிப்பிடப்பட்ட எண்ணுகளுக்கு தொடர்பு கொண்டு பதிவு செய்யலாம்.

ADVERTISEMENT

📞 தொடர்புக்கு: ‪+91 93842 72666‬ / ‪+91 96774 81111‬
📧 Email: vventertainmentsmedia@gmail.com
தேவைப்ப்டுபவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் .

ஆனால் என்ன உறுத்தல் என்றால் , அது என்ன பாண்டிய நாட்டு குறும்படப் போட்டி? இதுல என்ன வித்தியாசம் நாவல்டி இருக்கு?

ADVERTISEMENT

மதுரையை பாண்டிய நாட்டைக் களமாகக் கொண்டு எடுக்கப்பட்டு இருக்க வேண்டும் என்று சொன்னால் கூட பரவாயில்லை. பாண்டிய நாட்டுக்கான குறும்படப்போட்டி என்றால் என்ன அர்த்தம்?

ஏன் சேரனும் சோழனும் குறுநில மன்னர்கள் பகுதிளைச் சேர்ந்த படைப்பாளிகளும் கலந்துக்கக் கூடாதா?

படம் எடுக்கும்போதும் பாண்டிய நாட்டு தயாரிப்பாளர்கள்தான் வேணுமா? அப்புறம் பாண்டிய நாட்டு ஆட்கள் மட்டும் பார்த்தா போதுமா?

இலக்கியத்தில் பல இடங்களில் தமிழ்நாடு என்ற பெயர் இருந்தும் , சிலர் வேண்டும் என்றே இந்தப் பெயரை மாற்ற , இலக்கியத்தில் தமிழ் நாடு எங்கே இருந்தது? சேரநாடு. சோழ நாடு பாண்டிய நாடுதானே இருந்தது ?’ என்று விதண்டாவாதம் பேசிக் கொண்டு இருக்கிறார்கள் . அதற்கு பக்கபலமாக இருப்பது போல இப்படி பேர் வைக்கலாமா?

  • ராஜ திருமகன்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share