வணிக பயன்பாட்டு சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக கர்நாடகா மாநிலம் பெங்களூரில் ஹோட்டல்கள் மூடப்பட்டுள்ளன. இதே போல சென்னையிலும் ஹோட்டல்கள் மூடப்படும் நெருக்கடி உருவாகி உள்ளது.
ஈரான் மீதான இஸ்ரேல், அமெரிக்காவின் தாக்குதல் உக்கிரமடைந்துள்ளது. இதனால் சர்வதேச கச்சா எண்ணெய் போக்குவரத்தில் அதி முக்கியமான ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் இழுத்து மூடிவிட்டது.
- இதனையடுத்து உலக நாடுகளுக்கான கச்சா எண்ணெய், எரிவாயு விநியோகம் முடங்கி உள்ளது. இந்தியாவிலும் இது கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.
- இந்தியாவில் வணிகம் மற்றும் வீட்டு உபயோக சிலிண்டர் விலை கடுமையாக உயர்ந்தன.
- இதனைத் தொடர்ந்து வணிக பயன்பாட்டு சிலிண்டர்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
- சிலிண்டர்கள் போதுமான அளவு கிடைக்காத நிலையில் கர்நாடகா மாநிலம் பெங்களூரில் இன்று முதல் ஹோட்டல்கள் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
- இதேபோல சென்னை ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கமும் பிரதமர் மோடிக்கு கடிதம் அனுப்பி உள்ளன. அதிலும் ஹோட்டல்களை மூடும் நெருக்கடி உருவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இதே நிலைமை நீடித்தால் மதுரையிலும் அடுத்த 2 நாட்களில் ஹோட்டல்களை மூட வேண்டிய நிலை வரும் என அதன் உரிமையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
