ADVERTISEMENT

Weather: வங்க கடலில் அக்.24-ல் உருவாகும் காற்றழுத்த தாழ்வு நிலை- 5 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட்!

Published On:

| By Mathi

Weather Report

வங்கக் கடலில் வரும் 24-ந் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நாட்டில் வடகிழக்கு பருவமழை நேற்று அக்டோபர் 16-ந் தேதி தொடங்கியது. தமிழகம், புதுவை, கேரளா, தெற்கு கர்நாடகா பகுதிகளில் நேற்று முதல் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது.

ADVERTISEMENT

குமரிக் கடல், அதனை ஒட்டிய வங்க கடல் பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால்

கன்னியாகுமரி
தூத்துக்குடி
திருநெல்வேலி
தென்காசி
விருதுநகர்

ADVERTISEMENT

ஆகிய 5 மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யக் கூடும் என்பதற்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அக்டோபர் 18-ந் தேதியன்று

ADVERTISEMENT

நீலகிரி
கோவை
திண்டுக்கல்
தென்காசி
திருப்பூர்
ஈரோடு
கிருஷ்ணகிரி
தருமபுரி
சேலம்

ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது.

வானிலை அறிவிப்புகளில், 11 செ.மீ முதல் 20 செ.மீ வரையிலான மிக கனமழை பெய்யக் கூடும் என்ற நிலையில் ஆரஞ்ச் அலர்ட் விடுக்கபடும் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் பல்வேறு பகுதிகளில் இன்று காலை விடிய விடிய மழை கொட்டித் தீர்த்தது. இதேபோல தமிழகத்தின் பல பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share